Tag Archives: இந்திரவிழா

முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்

கோதண்டராமேஸ்வரா (English: Kondandaramesvara; Telugu: కోతండ రామ రాఎస్వారా) என்னும் ஆதித்தீஸ்வரா (English: Aditeesvara; Telugu: అదితిస్వారా) அல்லது ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில், ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி மண்டல், பொக்கிசம்பாளம் (English: Bokkasam Palem; Telugu: బొక్కసం పాలెం) பின் கோடு 517619  கிராமத்தில் அமைந்துள்ள முதலாம் ஆதித்த சோழரின் (கி.பி. 871-907) பள்ளிப்படை கோவிலாகும் (English: Sepulchre Temple).  பள்ளிப்படைக் கோவில் வழிபாடு எப்போது தொடங்கியது என்பது பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. பள்ளிப்படை கோவில் என்பது பிற்காலச் சோழர்களின் காலத்தில் உயிர்நீத்த சோழ மன்னர்கள் மற்றும் இவர்கள் குடும்பத்தினர்கள், பெரும் போரில் இறந்துபோன வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மீது எழுப்பப்பட்ட கோவிலைக் குறிக்கும். கல்வெட்டு பதிவுகள் இவ்வூரை தொண்டமாநாடு என்று குறிப்பிடுகின்றன.

விஜயாலய சோழனின் (கி.பி.846-881) மகனான இராஜகேசரி முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) கி.பி. 907 ஆம் ஆண்டு தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்து போனார். இவருடைய மரணம் பற்றி “தொண்டைமானரூர் துஞ்சின உடையார்” என்ற அடைமொழியுடன் (epithet) இரண்டாம் ஆதித்த சோழனின்  14 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட திருமால்புரம் (திருமால்பேர்) கல்வெட்டு பதிவு செய்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் திரு.வெங்கய்யா இந்தத் தொண்டமானாற்றூரை ஸ்ரீ காளஹஸ்திக்கு அருகில் உள்ள தொண்டமாநாடு என்று அடையாளம் கண்டுள்ளார். இவ்வூரை திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு தொண்டமான் பேராற்றூர் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
Continue reading

Posted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்