Tag Archives: இந்து கோவில்

பாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா?

பாலயூர் மகாதேவா கோவில் (English: Palayur Mahadeva Temple, Malayalam: പാലയൂർ മഹാദേവക്ഷേത്രം) , கேரளாவின் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு வட்டம் பாலயூரில் (Malayalam: പാലയൂർ) அமைந்திருந்த தொன்மை மிக்க கோவிலாகும். இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோவில் சேர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால் இக்கோவில் இன்று இல்லை. இந்தக் கோவில் கிறிஸ்தவர்களால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புனித தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கட்டப்பட்டது. இந்தச் சிரிய தேவாலயம் (English: Syrian church) கி.பி 52 ஆம் ஆண்டளவில் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் (அப்போஸ்தலர்களில்) ஒருவரான செயின்ட் தாமஸால் நிறுவப்பட்டதாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இது குறித்த விரிவான பதிவு இதுவாகும்.
Continue reading

Posted in கேரளா, கோவில், சுற்றுலா, மதம், மலையாளம் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும்

நாக பஞ்சமி என்றால் என்ன? இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது? இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது? நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள், வழிபாட்டு முறைகள் குறித்து இந்தப் பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in கோவில், மதம் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா

புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் நார்த்தாமலை, செவலூர் மலை மற்றும் அன்னவாசல் மலை ஆகிய மலைகளும் (Hills) தனிக்குன்றுகளும் (Knolls) ஆங்காங்கே காணப்படுகின்றன.. இங்கிருந்து நிலப்பரப்பு தட்டையாக கிழக்கு நோக்கிச் சரிகிறது. கிழக்கில் கழிமுகங்களும் நீண்ட கடற்கரையும் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருங்கற்கால ஈமக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சமணர்களின் தொன்மைமிக்க பல நினைவுச் சின்னங்கள் இந்த மாவட்டத்தில் சிதறிக் கிடக்கின்றன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள சோழர்கள் – பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த கருங்கற்றளிகள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒரே பதிவில் இந்த மாவட்டத்தின் சிறப்புகளைப் பதிவு செய்வது மிகவும் கடினமான பணி. இதன் காரணமாகவே இந்தப் பதிவு சற்று விரிவாக அமைந்துள்ளது. Continue reading

Posted in குகைகள், குடைவரைக் கோவில், கோவில், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்