Tag Archives: இரண்டாம் புலிகேசி

புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் 1

மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நிகழ்ந்துள்ள இடம் என்பதற்கான அறிகுறி சற்றும் இல்லாமல் அமைதியாகக் காட்சியளிக்கிறது புள்ளலூர் என்ற பொள்ளிலூர் கிராமம். இரத்தமும் இரணமும் தோய்ந்த இந்த மண் பல்லவர் காலத்துப் புகழ்பெற்ற போர்க்களமாகும். பல்லவ சாளுக்கியப் போர் நடந்த இதே குக்கிராமத்தில் 1,161 ஆண்டுகளுக்குப் பிறகு மைசூர் சுல்தானகத்திற்கும் (Sultanate of Mysore) கிழக்கு இந்திய கம்பெனிக்கும் இடையே கி.பி. 1780 ஆம் ஆண்டிலும் கி.பி. 1781 ஆம் ஆண்டிலும் ஆக இரண்டு காலகட்டங்களில் நடந்த போர் இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் என்று பெயர் பெற்றது. புள்ளலூர் கிராமத்தில் கைலாசநாதர் கோவிலும் இராகவப் பெருமாள் கோவிலும் புகழ் பெற்றவை. இங்கு சில கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெருமாள் கோவில் விமானத்தின் செங்கற் கட்டுமானம்  சிதைவுற்று சரிந்து இடிந்து போனது. தற்போது புதிய கோவில் வழிபாட்டில் உள்ளது. இந்தப் பதிவு கி.பி. 619 ஆம் ஆண்டு இதே புள்ளலூர் கிராமத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் மேலைச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே நடைபெற்ற பல்லவ சாளுக்கியப் போர் பற்றியும் புள்ளலூர் கோவில்களைப் பற்றியும் விவரிக்கிறது.
Continue reading

Posted in கோவில், தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

மேகுட்டி சமணக் கோவிலும் இரண்டாம் புலிகேசியின் ஐஹொளே கல்வெட்டும்

மேகுட்டி சமணக் கோவில் (Meguti Jain temple) இரண்டாம் புலிகேசி (கி.பி. 609–642) காலத்தில் சிறிய குன்றின்மீது கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களில் ஒன்று. இந்தக் கோவில் இதன் ஆரம்பக் கட்டத்தைக் கடந்து முற்றுப்பெறவேயில்லை. இந்தச் சமணக் கோவில் 24 ஆம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் புலிகேசியின் அவையில் இடம்பெற்றிருந்த மகா கவிஞரும், அறிஞரும், படைத்தலைவருமான இரவிகீர்த்தி என்பவரால் கி.பி. 634 – 635 ஆம் ஆண்டுகளில் இக்கோவில் கட்டப்பட்டது. இரவிகீர்த்திப் புகழ் வாய்ந்த ஐஹொளே கல்வெட்டை (கி.பி. 624 ஆம் ஆண்டு) மேகுட்டி கோவில் வெளிப்புறச் சுவற்றில் பொறித்ததாக அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இந்த மேகுட்டி சமணக் கோவில் மற்றும் ஐஹொளே கல்வெட்டுப் பற்றி இப்பதிவில் காண்போமா? Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்