Tag Archives: இரும்புக்காலம்

தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

உலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம்,  தொல்லியல், கல்வெட்டியல் மற்றும்  நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன்.

இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு பிரித்தெடுத்தல் (Iron Extraction), வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought Iron), எஃகு (Steel) போன்ற கார்பன் மிகுந்த / சமன்படுத்தப்பட்ட இரும்புக் கலவைகளின் (High Carbon Iron Alloys) உற்பத்தி முறைகள், பண்புகள் பற்றி இந்த இரண்டாம் பதிவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல தொல்லியல் களங்களில் பயன்படுத்தப்பட்ட புடக்குகை (மூசை) உலை (Crucible Furnace), இரும்பு உருக்கும் உலை (Iron Smelting Furnace) போன்ற உலைகள் பற்றியும், கரியூட்டம் (Carbonization / Carburizing), கரிநீக்கம் (Decarbonization) போன்ற சுத்திகரிப்பு செயலாக்க நுட்பங்கள் (Purification Processing Techniques) பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முனைவர்.சசிசேகரன், பி மற்றும் பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் போன்ற தொல்பொருள் உலோகவியல் வல்லுனர்கள் (Archaeometallurgists) மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் சோதனைக்கூட ஆய்வுகளில் சோதித்தறிந்த உலோக மாதிரிகளின் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in தமிழ், தமிழ்நாடு, வரலாறு | Tagged , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு எஃகு தொழில் நுட்ப அறிவு

மனித நாகரீகத்தின் முன்னேற்றத்தை கற்கால நாகரீகத்திலிருந்து உலோக கால நாகரீகத்திற்கு (Iron Age Civilization) நகர்த்திய உலோகங்களில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கொஞ்சம் இரும்புத் தாது நெருப்பில் விழுந்து உருகிக் குளிர்ந்து கட்டி இரும்பான (Wrought Iron) போது  ஆதிமனிதனால்  இந்த உலோகம் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் நினைக்கிறார்கள். இரும்பு இவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது உண்மை. இரும்பினால் செய்யப்பட்ட  செய்யப்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் திறம்படப் பயன்பட்டன.

ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம் (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்), புதிய கற்காலம் (கி.மு. 10,000 – கி.மு. 4,000 வரை) எனப் பிரித்தார்கள்.  புதிய கற்கால நாகரீகதிற்குப் பிறகு உலோககால  (பொற்காலம், செம்புக்காலம், இரும்புக்காலம்) நாகரீகம் தோன்றியது.

தமிழகத்தில் கி.மு. 500 ஆம் ஆண்டளவில் இரும்பு அறிமுகமாகியிருக்கலாம். கொடுமணல், மேல்சிறுவலூர், குட்டூர், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு  போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தின் இரும்புக் காலகட்டத்தை வரையறை செய்ய உதவுகின்றன. சங்க இலக்கியம் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் தமிழகத்தில் இரும்புத் தொழில்துறை செழித்தோங்கியது பற்றியும் ரோம் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இரும்பும் எஃகும் ஏற்றுமதியானது குறித்தும் பதிவு செய்துள்ளன. பண்டைய ரோமானிய ஆவணங்கள் சங்ககாலத்துத் தமிழகத்தின் சேர நாட்டிலிருந்து எஃகு இறக்குமதி செய்யப்பட்டது குறித்தும் பதிவு செய்துள்ளன. இது தமிழகத்தின் இரும்புக் காலம் பற்றிய இரண்டு பதிவுகள் கொண்ட தொடர் ஆகும்:
Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

திருப்பத்தூர் அருகே, ஏலகிரி மலையடிவாரத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு

திருப்பத்தூருக்கு அருகே ஏலகிரி (Yelagiri) மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டுரெட்டியூர் (Gundureddiyur) கிராமத்தில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் சில சுய ஆர்வலர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும், “தொழிற்சாலை குடியிருப்பு (வாழ்வியல்) மேட்டைக்” (Industrial settlement Mound) கண்டறிந்துள்ளனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்கள் தலைமையில் சுயஆர்வலர்கள் இடம்பெற்ற தொல்லியல் குழுவினர் குண்டுரெட்டியூர் கிராமப் பகுதிகளையொட்டி வழக்கமான களப்பணி மேற்கொண்டபோது இந்தத் தொல்பழங்கால மனிதர்களின் வாழ்வியல் மேடு கண்டறியப்பட்டது. இது பற்றிய விரிவான செய்தியினைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்