Tag Archives: உடல்நலம்

பீடோமீட்டரும் பத்தாயிரம் அடிகள் நடைப்பயிற்சி இலக்கும் உங்கள் உடல்நலத்தை மேம்பாடுத்துமா?

நாம் ஏன் நடைப்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்? ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? எப்போது நடக்க வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. நடைபயிற்சி என்பது சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாகும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கருத்துத் தெரிவித்துள்ளது. .உங்கள் உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டுமா? உங்கள் உடல் எடை குறைந்து கச்சிதமான உடல் வாகுடன் திகழ வேண்டுமா? நடைப்பயிற்சி செய்யுங்கள் என்று நம் ஊர் மருத்துவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். உடல் உழைப்பு முற்றிலும் காணமல் போய்விட்ட இன்றைய வாழ்க்கை முறையில், விறுவிறுப்பான நடைப்பயிற்சி (Brisk Walking) அனைத்து வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சி ஆகும். பத்தாயிரம் அடிகள் என்பது எப்படி நடைப்பயிற்சி இலக்கானது?  பீடோமீட்டர் என்னும் மின்னணுக் கருவிகள் எவ்வாறு இந்த நடைப்பயிற்சி இலக்கை அடைய உதவுகிறது? இது போன்ற வினாக்களுக்கான விடைகள் இப்பதிவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. Continue reading

Posted in உடல் நலம், வாழ்க்கை முறை, Uncategorized | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்