Tag Archives: எண்முறை

தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

உலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம்,  தொல்லியல், கல்வெட்டியல் மற்றும்  நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன்.

இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு பிரித்தெடுத்தல் (Iron Extraction), வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought Iron), எஃகு (Steel) போன்ற கார்பன் மிகுந்த / சமன்படுத்தப்பட்ட இரும்புக் கலவைகளின் (High Carbon Iron Alloys) உற்பத்தி முறைகள், பண்புகள் பற்றி இந்த இரண்டாம் பதிவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல தொல்லியல் களங்களில் பயன்படுத்தப்பட்ட புடக்குகை (மூசை) உலை (Crucible Furnace), இரும்பு உருக்கும் உலை (Iron Smelting Furnace) போன்ற உலைகள் பற்றியும், கரியூட்டம் (Carbonization / Carburizing), கரிநீக்கம் (Decarbonization) போன்ற சுத்திகரிப்பு செயலாக்க நுட்பங்கள் (Purification Processing Techniques) பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முனைவர்.சசிசேகரன், பி மற்றும் பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் போன்ற தொல்பொருள் உலோகவியல் வல்லுனர்கள் (Archaeometallurgists) மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் சோதனைக்கூட ஆய்வுகளில் சோதித்தறிந்த உலோக மாதிரிகளின் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in தமிழ், தமிழ்நாடு, வரலாறு | Tagged , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

தமிழ் எண்முறை: கல்வெட்டு படிப்பதற்கு தமிழ் எண்களைக் கற்றுக்கொள்ளலாமே!

பண்டைய நாகரிக காலத்தில் (early civilization) வாழ்ந்த மனிதனுக்கு எண்களின் (numbers) இன்றியமையாமையும் அவற்றைக் கையாளும் முறைகளும் தெரிந்திருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம்! பண்டைய காலத்தில் ஒவ்வொரு சமூகமும் (society) தங்கள் எண்களுக்கான குறியீடுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் எண்களை குறித்துக் காட்ட வெவ்வேறு எழுத்து முறைகள் (glyphs) இருந்தன.

தமிழருக்கு எண்கள் பற்றிய அறிவு துல்லியமாக இருந்துள்ளது. எண்ணையும் எழுத்தையும் தமிழர்கள் இரண்டு கண்களாகக் கருதினார்கள். அவ்வையார் கொன்றைவேந்தனில் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’ என்றார். திருவள்ளுவரும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

தமிழ் எண்முறை மிகப் பழமையானது. வட்டெழுத்து தோன்றிய காலத்திலிருந்து இது புழக்கத்தில் இருந்துள்ளது. மற்ற எண்முறைகளை விட தமிழ் எண்முறை துல்லியமானது. தமிழ் எண்ணிக்கை முறைமை

1,000,000,000,000,000,000,000 (10 to the power of 21) Sextillion ambal ஆம்பல் ௲௲௲௲௲௲௲

வரை நீள்கிறது. இது போல மற்ற எண்முறைகளில் காண முடியாது! செட்டிநாட்டுப் பகுதிகளில் 70 மற்றும் 80 களில் இம்முறை புழக்கத்தில் இருந்தது. இன்று இந்த எண்முறை புழக்கத்தில் இல்லை. மறந்துவிட்டோம். சரி.. இப்பதிவில் தமிழ் எண்முறை பற்றிப் பார்ப்போமா?
Continue reading

Posted in கல்வி, தமிழ், தொல்லியல் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்