Tag Archives: ஒன்பது கருவறைகள்

சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானம், உத்தரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டம், உத்தரமேரூர் பின் கோடு 603406 வரலாற்று சிறப்புமிக்க நகரம். இவ்வூர் உத்தரமேரூர் நகர பஞ்சாயத்தில் அங்கம் வகிக்கிறது. இந்த ஊர் முதன் முதலில் பிராமணர் குடியேற்ற கிராமமாக இருந்துள்ளது. பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன் (720–796 CE) இவ்வூரை கி.பி. 750 ஆண்டில் ஒரு பிரம்மதேய கிராமமாக உருவாக்கி ஸ்ரீவைஷ்ணவ வேத பிராமணர்களுக்கு நிலக்கொடையாக அளித்துள்ளார். இவ்வூரின் வரலாறு பல்லவர்களுக்கு முந்தையதாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது: பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று இவ்வூரை உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கிறது. இவ்வூர் பற்பல வம்ச அரசர்களின் ஆடசிக் காலத்தில் பற்பல பெயர்களில் அழைக்கப்பட்டன: ராஜேந்திரசோழ சதுர்வேதிமங்கலம், விஜயகந்தகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை என்று பல பெயர்கள்.

வாஸ்து முறையில் அமைந்துள்ளதாக கருதப்படும் இவ்வூரில் இரண்டு வைணவக் கோவில்கள் உள்ளன. ஒன்று வைகுந்தப்பெருமாள் கோவில் மற்றோன்று சுந்தரவரதப் பெருமாள் கோவில். சுந்தரவரதப் பெருமாள் கோவில் வாஸ்து சாஸ்திரத்தில் பெயர் பெற்ற பரமேசுவரத் தச்சனைக் கொண்டு நந்திவர்ம பல்லவன் இதை கட்டுவித்தான் என்றும் ‘மயன் மதம்‘ என்ற நூலின் அடிப்படையில் இது கட்டப்பட்டிருக்கிறது என்பது செய்தி. பல்லவர்களால் கட்டுவிக்கப்பட்டு சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்கர்களால் இக்கோவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து நிலைகளுடன் கம்பிரமாய் இராஜகோபுரம் விண்ணை முட்டுகிறது. கோவிலைச் சுற்றி உயர்ந்த திருமதில்கள் அமைந்துள்ளன. கொடி மரமு ம், கருட சன்னதியும் தாண்டி கிழக்கு நோக்கிய வாயிலின் மூலம் ஸ்ரீ சுந்தரவரதப் பெருமாள் கருவறையை அடையலாம்.
Continue reading

Posted in கோவில், தொல்லியல் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக