Tag Archives: ஓவியக்கலை

பட்ட சித்ரா, தாலபட்ட சித்ரா: ஒரிசாவின் பாரம்பரிய ஓவியக்கலை

பட்ட சித்ரா (Odiya: ପଟ୍ଟା ଚିତ୍ର) என்பது ஒரு பழங்காலக் கலை வடிவம் . இந்த வடிவம் கிழக்கு இந்திய மாநிலமான ஒடிஸாவின் பாரம்பரிய கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த ஓவியக்கலையாகும். சமஸ்கிருத மொழியில் “பட்டா” (Sanskrit: पत्ता) என்றால் “துணி” (canvas) என்று பொருள்; “சித்ரா” (Sanskrit: चित्र ) என்பதன் பொருள் “படம்” என்பதாகும். பட்ட சித்ரா என்றால் துணியில் வரையப்படும் பாரம்பரியமிக்கச சுருள் ஓவியத்தைக் (scroll paintings) குறிக்கும் ஒரு பொதுவான சொல் எனலாம். பட்டா சித்ராவின் தோற்றம் மிகவும் சுவாரஸ்யமானது பண்டைய காலங்களில், எழுத்துத் தொடர்புக்குக் காகிதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது நமக்குத் தெரியும். பனை ஓலைகளை எழுத்துவதற்குப் பயன்படுத்தினார்கள். தொடக்கக் காலங்களில், பனை ஓலைகளில் செய்திகளை மட்டுமே அனுப்பினார்கள். இதன் பிறகு செய்திகளுடன் விளக்கப் படங்களையும் சேர்த்துக் கொண்டார்கள். அடுத்து விரைவிலேயே இந்த விளக்கப்படங்கள் பட்ட சித்ரா என்னும் அற்புதமான கலை வடிவமாக மாற்றம் கண்டது.
Continue reading

Posted in நுண்கலை, வாழ்க்கை முறை | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

லெபாக்ஷி

விஜயநகரப் பேரரசு லெபாக்ஷியில் வீரபத்திரர் கோவிலைக் கட்டியுளார்கள். இந்தக் கோவிலினுள் சிவன், விஷ்ணு, வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்குச் சிறு கோவில்களைக் கட்டியுளார்கள. இங்குள்ள வீரபத்ரர் கோவில் மட்டும் கலைநயம் வாய்ந்தது. மற்ற கோவில்கள் அளவில் சிறிய கோவிகள் என்று சொல்லலாம். கூர்மசைலம் (ஆமை வடிவில் அமைந்த மலை) என்று பெயரில் வழங்கப்படும் சிறிய குன்றின் மேல் அமைந்த கோவில் வளாகத்திற்குள் பாபநாதீஸ்வர, ரகுநாதர், ஸ்ரீராமர், துர்க்கை ஆகிய தெய்வங்களுக்குக் கோவில்கள் உள்ளன.  இவற்றுள் லெபாக்ஷியில் கட்டப்பட்டுள்ள வீரபத்திரர் கோவில் புகழ்பெற்ற விஜயநகரக் கட்டிடக்கலை சகாப்தத்தில் ஒரு மைல்கல் எனலாம். விஜயநகரப் பேரரசு கட்டிடக்கலையின் உன்னத நிலையில் இருந்தபோது அமைத்த நேர்த்தியான சிற்பங்களையும் ஓவியங்களையும் காண்பதற்காக லெபாக்ஷிக்குச் செல்வது சிறப்புமிக்கது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக