Tag Archives: கடல்சார் ஆய்வுகள்

எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள்

மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center). இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு வங்கக் கடலுடன் சங்கமிக்கும் கழிமுகத்தில் அமைந்திருந்தது. இந்தப் பதிவில் ஆழ்கடலில் மூழ்கிய இத்துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஆய்வாளர்கள் கண்டறிந்த  மதிற்சுவர் பற்றியும், சிறுபாணாற்றுப்படை காட்டும் ஓவியர் குடிப்பிறந்த நல்லியக்கோடன் ஆண்ட ஒய்மா நாடு, அதன் தலைநகரான நன்மாவிலங்கை பற்றியும், கிடங்கில், ஆமூர், வேலூர், எயிற்பட்டினம்  ஆகிய ஊர்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. Continue reading

Posted in இலக்கியம், தமிழ், தொல்லியல் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்