Tag Archives: கன்னடம்

தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில்: கடம்பர் வம்ச வரலாற்றையும், பூர்வ ஹளே கன்னட மொழியின் தொன்மையையும் அறிய உதவும் கல்வெட்டுகள்

பிரணவேஸ்வரா கோவில் கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம், சாகர் வட்டம் தலகுண்டாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்ப வம்சத்தவர்களின் கோவிலாகும்.  சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரணவேஸ்வரா கோவில் தலகுண்டாவின் முதன்மையான வசீகரமிக்க கோவிலாகும். தலகுண்டா முன்னர் ஸ்தானகுண்டூர் என்று பெயரிடப்பட்டிருந்தது. இது ஒரு அக்ராஹரம் (வேதபாடசாலை என்னும் ஆன்மீகக் கற்றல் மையம்) ஆகும். இது கர்நாடகா மாநிலத்தில் முதன் முதலாக அங்கீகாரம் பெற்ற ஆக்ரஹரம் ஆகும்.

தலகுண்டாவில் கண்டறியப்பட்ட சில கல்வெட்டுகள் கடம்ப வம்சத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றித் தெளிவு படுத்தியுள்ளன. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட தலகுண்டா தூணின் கல்வெட்டு கடம்ப வம்ச தலைமுறையின் முழு மதிப்பீட்டையும் இவர்களின் அதிகார வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. கடம்ப வம்சம் சுமார் 200 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தார்கள் . கி.பி. 350 இல் மயூரசர்மனால் நிறுவப்பட்டது. கடம்ப வம்சத்தவர்கள் கன்னட மொழி பேசிய கர்நாடக மண்ணின் மைந்தர்கள் ஆவர். அவர்களது வசிப்பிடத்திற்கு அருகில் பல கடம்ப மரங்கள் இருந்ததன் காரணமாகவே கடம்பர் என்று பெயர் பெற்றார்கள்.

இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் (ஏ.எஸ்.ஐ) பாதுகாப்பிலுள்ள இக்கோவில் வளாகத்தில் சில அரிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோவில் பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. ஏ.எஸ்.ஐ பணியாளர்கள் ஒவ்வொரு கல்லையும் நீக்கி அதற்கு வரையறுக்கப்பட்ட இலக்கமிட்டுள்ளார்கள். இவ்வாறு நீக்கிய போது இவ்வளாகத்தில் செப்பேடுகளையும் தங்க நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். தற்போது இக்கோவில் மறுபடியும் கட்டப்பட்டு பழைய வடிவத்தைப் பெற்றுள்ளது. தலகுண்டா தொல்லியல் / வரலாற்று ஆர்வலர் ஒவ்வொருவரும் அவசியம் வருகை புரிய வேண்டிய கோவிலாகும். Continue reading

Advertisements
Posted in கோவில், தொல்லியல், மொழி, வரலாறு | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

பாதாமி: புத்தர் குகைத்தளம், அனந்தசயன விஷ்ணு கோவில், கப்பெ அரபட்டா கல்வெட்டு

பாதாமியில் நாம் கண்ட இந்த நான்கு குடைவரைக் கோவில்களைத் தவிர, வேறு சில இயற்கைக் குகைகளும் இடைக்காலத்தைச் சேர்ந்த கற்கோவில்களும் உள்ளன. முன்பு நாம் பார்த்த அகஸ்தியர் தீர்த்த  குளத்தையொட்டி கிழக்குத் திசையில் பூதநாதா கோவில்களின் தொகுதியின் அருகே கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய அளவில் அமைந்த சாளுக்கியர் காலத்து இயற்கைக் குகைத்  தளம் ஒன்று காணப்படுகிறது. இதனை அடுத்து ஒரு சிறிய கோவில் ஒன்று அனந்தசயன விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனந்தசயன விஷ்ணு பாம்பணையில் சயனித்த நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளார். பூதநாதா தீர்த்தக் குளத்திற்குப் போகும் வழியில் மணற்பாறை  ஒன்றில் வராஹர், கணேசர், மும்மூர்த்திகள், மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர் ஆகியோர் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். பாதாமியின் வடக்குக் கோட்டைப் படிக்கட்டையொட்டி  சற்றுத் தொலைவில் செங்குத்தான பாறையில் கப்பெ அரபட்டா (Kappe Arabhatta) என்ற பெயருடன் கன்னடக் கல்வெட்டு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in தொல்லியல், பெளத்த சமயம், மதம் | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஹல்மிதி கன்னட வரிவடிவக் கல்வெட்டும் கன்னட மொழியின் செம்மொழித் தகுதியும்

கன்னட மொழியில் புகழ்பெற்றதாக அறியப்பட்ட கல்வெட்டுகளில் ஹல்மிதி கல்வெட்டு ஒரு பழமையான கல்வெட்டாகும். ஹல்மிதி கிராமத்தில் கைப்பற்றிய மூல ஹல்மிதி கற்பலகைக் கல்வெட்டை கர்நாடக மாநில அரசின், மைசூர் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குநர் அலுவலகத்தில் காணலாம். ஹல்மிதி கற்பலகைக் கல்வெட்டின் கண்ணாடியிழைப் பிரதி (fibreglass replica of the Halmidi Inscription) ஹல்மிதி கிராமத்தில் ஒரு பீடத்தின்மேல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), கன்னட மொழியை அதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language (ಶಾಸ್ತ್ರೀಯ ಭಾಷೆ) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது. கி.பி. 450 – 500 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய “ஹல்மிதி கன்னட வரிவடிவமே” (Halmidi Kannda script (ಹಲ್ಮಿತಿ ಕನ್ನಡ ಲಿಪಿಯನ್ನು) தொன்மையான வரிவடிவம் என்ற தகுதியின் அடிப்படையில் இத்தகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவு ஹல்மிதி கல்வெட்டு பற்றி விவரிக்கிறது.
Continue reading

Posted in தொல்லியல், மொழி | Tagged , , , , , | 1 பின்னூட்டம்