Tag Archives: கல்லீரல்

நான் உங்கள் கல்லீரல்: மிக உண்மையுள்ள ஊழியன், உங்களுக்குச் சேவை செய்ய எனக்கு உதவுங்கள்

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் கல்லீரல் பேசுகிறேன். உங்கள் வயிற்றுப் பகுதியின் வலது பக்கத்தைத் தொட்டுபாருங்கள். வலது விலா எலும்புக் கூடு இருப்பதைத் தொட்டுப் பார்தீர்களா? இந்த விலா எலும்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்கள் வயிற்று அறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்குக் கீழாகவும் பார்த்தால் நான் இருப்பது தெரியும். ஆப்பு வடிவத்தில் (wedge shaped) அமைந்துள்ள எனக்குக் கீழே உங்கள் பித்தப்பை (gall bladder) இருப்பது தெரிகிறதா? இடதுபுறம் உங்கள் இரைப்பை (stomach) இருப்பதையும் பாருங்கள்.சரி..! என்னைத் தொட்டுப்பார்த்து உணர முடிகிறதா?

உங்கள் உடலில் நான் ஓர் ஆச்சரியமான உறுப்பு என்று கூடச் சொல்லலாம். ஏன் தெரியுமா? உங்கள் உடலின் முக்கியமான 500 வேலைகளைச் நானே செய்கிறேன்! நான் இல்லை என்றால் நீங்கள் ஸ்தம்பித்துப் போய் விடுவீர்கள்!!நான் இல்லாமல் உங்களாலே வாழவே முடியாதுங்க!!! Continue reading

Posted in உடல் நலம் | Tagged , , , , | 9 பின்னூட்டங்கள்