Tag Archives: கல்வெட்டுகள்

பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்: திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு

கொடுங்குன்றநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், பிரான்மலை பின் கோடு 630502 கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுத் தேவாரப் பதிகளில் ஐந்தாவதாகக் கருதப்படும் கொடுங்குன்றநாதர் கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்ற வேள்பாரி என்ற வேளிர் குடிப்பிறந்த குறுநிலமன்னன் ஆட்சி செய்த இப்பகுதிக்குப் பறம்பு நாடு என்று பெயர். இவன் பறம்பு … Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்

ஆந்திரப் பிரதேச மாநிலம், எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் மாவட்டம், முதுக்கூர் மண்டலில், வங்கக் கடற்கரையை ஒட்டி, அமைந்துள்ள சிறு கிராமம் கிருஷ்ணபட்ணம் (Telugu: కృష్ణ పట్నం) பின் கோடு 524344 ஆகும். இவ்வூர் தனியாரால் கட்டமைக்கப்பட்டுத் தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணபட்ணம் துறைமுகம் ஆகும். Krishnapatnam Port Company Limited (KPCL) என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் இத்துறைமுகம், ஆழமிக்கதும் எல்லாப் பருவநிலைகளுக்கும் ஏற்றதுமான துறைமுகம் ஆகும்.

இந்தக் கிராமம், ஒரு காலத்தில் பன்னாட்டுத்  துறைமுகபட்டணமாகத் திகழ்ந்தது என்பதை நம்புவது சற்று கடினம்தான். தூர கிழக்கு நாடுகள் (far-eastern) மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் நிலைபெற்றிருந்த பேரரசுகளுடன் (south-eastern Asian empires) விரிவான வணிகம் மேற்கொண்ட  பன்னாட்டு வணிகர் குழுவினரின் (International Merchant-Guilds) துறைமுகப்பட்டணமாகக் கிருஷ்ணபட்ணம் விளங்கியது என்பது சற்று வியப்பான செய்திதான். இவ்வூரில் சித்தேஸ்வரருக்கு  அர்ப்பணிக்கப்பட்ட, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. மனும சித்தேஸ்வரம் (Manuma-Siddhisvaram) என்ற பெயருடன் இக்கோவில் திகழ்ந்துள்ளது. Continue reading

Posted in தொல்லியல், மேலாண்மை, வரலாறு | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கான்ஹெரீ பெளத்த குடைவரைகள், கிழக்கு போரிவலி, மும்பை

மும்பை சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள பௌத்த குகைகளைக் காண ஆர்வம் உள்ளதா? நீர்வீழ்ச்சி, ஏரிகள், பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடி நிறைந்த அடர்வனப் பகுதியில் உங்கள் விடுமுறையைக் கழிக்க விருப்பமா? கவலை வேண்டாம்!. மும்பை போரிவலி கிழக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் (संजय गाँधी राष्ट्रीय उद्यान) பூங்காவின் மையத்தில் உள்ள கான்ஹெரீ பெளத்த குடைவரை வளாகமும் (कान्हेरी गुफाएँ)  உங்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கான சிறந்த தேர்வு ஆகும்.

கான்ஹெரீ 109 பௌத்த குடைவரைகள் அடங்கிய வளாகம் ஆகும். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பழமையான குடைவரைகளைப் பௌத்த துறவிகள், கிருஷ்ண சைலா (அல்லது கன்ஹ சைலா) என்ற செங்குத்துப் பாறையை அகழ்ந்து உருவாக்கியுள்ளார்கள். இந்த 109 குடைவரைகளில் பெரும்பாலானவை சிறிய அளவில் அமைக்கப்பட்ட அறைகள் ஆகும். இவை பெளத்த விகாரைகள் (विहार) என்றழைக்கப்பட்டன. இங்கு வாழ்ந்த பெளத்த துறவிகள் விகாரைகளை உறைவிடமாகவும், பயிலுமிடமாகவும், தவமியற்றும் இடமாகவும்  பயன்படுத்தி உள்ளனர். விகாரைகள் மட்டுமின்றிப் பெரிய அளவில் காணப்படும், பொது வழிபாட்டிற்கான, குடைவரைகள் சைத்தியம் (चैत्य)  என்று அழைக்கப்பட்டன. பெளத்த சைத்தியங்கள், துறவிகள் ஒன்றிணைந்து கூட்டாக வழிபடவும், பெளத்த இறையியல் (Buddhist Theology) பயிலவும் பயன்பட்டன. அரை வட்ட (குதிரை லாட) வடிவில் அழகிய தூண்களுடன் அமைக்கப்பட்ட சில சைத்திய மண்டபங்களில் (Colonades) ஸ்தூபிகள், வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிதும் பெரிதுமாகப் பல ஸ்தூபிகளை இங்கு காணலாம். சைத்தியங்களில் புடைப்புச் சிற்பத் தொகுப்புகள், மாபெரும் புத்தர் சிற்பங்கள் (Colossal Buddha Statues) எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல கல்வெட்டுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. Continue reading

Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், பெளத்த சமயம் | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்