Tag Archives: கூகுள் பிளே ஸ்டார்

தமிழில் மின்னூல்கள்: அமேசான் கிண்டில் இ-புக்ஸ், கூகுள் பிளே மற்றும் சிறு தரவுத் தளங்கள்

கணினியில் iOS, Android, Mac மற்றும் PC களுக்கான இலவச அமேசான் கிண்டில் செயலிகள் இலவசமாகக் கிடைக்கிறது. இதனைக் கணினியில் கூகுள் பிளே ஸ்டார் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டார், அல்லது அமேசான் கிண்டில் ஆப் போன்ற இயங்குதளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அமேசானில் தற்போதுள்ள மின்னூல்கள், ஏற்கனெவே அச்சு வடிவில் வெளியிடப்பட்ட நூல்களாகும். இந்த மின்னூல்கள் அமேசானின் இந்திய தளத்தில் மட்டும் விற்பமனையாகின்றன.
நீங்கள் வைத்துள்ள ஆண்ட்ராய்டு டேப்லெட், கிண்டில், நூக் போன்ற எந்தக் கருவியை வேண்டுமானாலும் பயன்படுத்திப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். கிண்டில் அன்லிமிடெட் என்று ஒரு திட்டமும் உள்ளது. இது தற்போது பயன்படுத்திவரும் லெண்டிங் லைப்ரரி திட்டம் போன்றதுதான். அமேசானின் போட்டி நிறுவனமான கூகுள் பிளே புக்ஸ் சேவையும் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்களை வழங்கி வருகிறது. Continue reading

Posted in இணைய நூலகம் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக