Tag Archives: கேரளா

திரிபுனித்துரா மலை மாளிகை (அரண்மனை) மற்றும் அருங்காட்சியகம்

திரிபுனித்துரா மலை மாளிகை (கனக்கக்குன்னு அரண்மனை), கி.பி. 1855 ஆம் ஆண்டு முதல், முந்தைய கொச்சி அரசர்களின் அரசவையாகவும் வாழ்விடமாகவும் (Royal Court and Official Residence) திகழ்ந்தது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் கொச்சி அரசமரபினர் மகோதயபுரம் பெருமாள்களின் (பிற்காலச் சேரர்களின்), தாய்வழி வாரிசுரிமை முறையின்படி வந்த வழித்தோன்றல்கள் ஆவர். இந்த மாளிகையின் பழைய கட்டமைப்புகள் கி.பி. 1853 மற்றும் 1864 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். கேரளாவின் கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியான திரிபுனித்துராவில் கனக்கக்குன்னு என்ற குன்றின் மீது அமைந்துள்ள இந்த மாளிகை, தற்போது கேரள மாநில தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் முழு அளவிலான பண்பாடு மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் (Ethno-Archaeological Museum) செயல்பட்டுவருகிறது. தொன்மை மிக்க இந்த அரச மாளிகையை ஒரு அரும்பொருள் களஞ்சியம் என்று கூறலாம்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பூங்கா, மான் பூங்கா, கலாச்சார அருங்காட்சியகம், ஆகிய பல வசதிகளை உள்ளடக்கிய இந்த சுற்றுலாத் தலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். புகழ்பெற்ற மலையாள திரைப்படமான மணிச்சித்ரத்தாழு இங்கே படமாக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

Continue reading

Posted in கேரளா, சுற்றுலா, வரலாறு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாழப்பள்ளி மகாதேவர் கோவில் செப்பேடும் மலையாள மொழியின் செம்மொழித் தகுதியும்

இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), மலையாள மொழியை இதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language) என்று வகைப்படுத்த வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. இந்த வல்லுநர் குழு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று  அளித்த பரிந்துரையை பண்பாட்டுத் துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. மத்திய அமைச்சரவை இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு  2013 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாளன்று மலையாள மொழியைச் செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது.  வாழப்பள்ளி செப்பேடு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட ஓர் இன்றியமையாத ஆவணம். வாழப்பள்ளி மகாதேவர் கோவில் பற்றிய ஒரு தீர்ப்பாணையும் (decree), திருவாற்றுவையைச் சேர்ந்த சிலரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் ஆகும். இந்தத் தீர்ப்பனையை இரண்டாம் சேரப் பேரரசின் / குலசேகரப் பேரரசின் அரசரான இராஜசேகர வர்மா வெளியிட்டுள்ளார். இந்தச் செப்பேடு எவ்வாறு மலையாளம் செம்மொழி தகுதி பெற உதவியது என்பது பற்றி இந்தப்பதிவு விவரிக்கிறது.
Continue reading

Posted in கேரளா, தொல்லியல், மலையாளம், மொழி | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

குதிரமாளிகா பேலஸ் மியூசியம் (புத்தன் மாளிகா), திருவனந்தபுரம்

குதிரமாளிகா பேலஸ் மியூசியம் (புத்தன் மாளிகா), திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஸ்ரீ சுவாதித் திருநாள் ராம வர்மாவால் கட்டடப்பட்டது. இந்த மாளிகை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகே  தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களின் பரந்த வளாகத்தின் ஒரு பகுதி ஆகும்.   இந்த மாளிகைக்குக் குதிரமாளிகா என்று ஏன் பெயரிட்டார்கள் தெரியுமா? மாளிகையின் தெற்குப் பகுதியின் கூரையை, குதிரை வடிவங்களில் செதுக்கப்பட்ட 122 கொடுங்கைகள் (cornice) தாங்குகின்றன. இதனால்தான் இந்த மாளிகையைக் குதிரமாளிகா என்று அழைத்தார்கள். இந்த மாளிகையில் மொத்தம் 80 அறைகள் உள்ளன. இந்த 80 அறைகளில் 20 அறைகள் 1995 ஆம் ஆண்டு முதல் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டன. குதிரமாளிகாவின் ஒரு பகுதியானது, திருவாங்கூர் அரச பரம்பரைக் குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்களில் சிலவற்றை இந்த மாளிகையில் காட்சிப்படுத்தி, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாளிகை மற்றும் அருங்காட்சியகத்தைப் பற்றி இந்தப் பதிவு விவரிக்கிறது.
Continue reading

Posted in சுற்றுலா, வரலாறு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்