Tag Archives: கோவில்

பிர்லா மந்திர், ஹைதராபாத்

பிர்லா மந்திர் தெலிங்கானா மாநிலம், ஹைதராபாத்  நகரின் ஆதர்ஷ் நகர் காலனி, (பின் கோடு 500063) காசி பஜார் (Gasi Bazar), காகர்வாடியில்  (Kakarwadi) அமைந்துள்ளது. இக்கோவில் உசைன்சாகர் ஏரியின் தென்கரையில், 85 மீ. (280 அடி) உயரம் கொண்ட நௌபத் பர்பத் (Naubat Parbat) என்னும் காலா பஹத் குன்றின் (Kala Pahad Hillock) மேல், 13 ஏக்கர் (53,000 சதுர மீ.) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 டன் தூய இராஜஸ்தான் வெள்ளைச் சலவைக் கல் கொண்டு பிர்லா அறக்கட்டளையால் (Birla Foundation) கட்டுவிக்கப்பட்ட இக்கோவில் வேங்கடேஸ்வரருக்கு அற்பணிக்கப்படுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இராமகிருஷ்ணா மிஷனரியைச் சேர்ந்த சுவாமி அரங்கநாதானந்தா 1976 ஆம் ஆண்டில் திறந்து வைத்துள்ளார். இதன் அமைவிடம் :17.4061875°N அட்சரேகை 78.4690625°E தீர்க்கரேகை ஆகும். Continue reading

Advertisements
Posted in கோவில் | Tagged , , , , , ,

குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம்

மூன்று சிவலிங்கங்கள் படிமக் கலை வரலாற்றில் காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம்,  ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. இது சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்தது ஆகும். இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் சிவலிங்கமும் இதுவாகும். மற்ற இரண்டு சிவலிங்கங்களும்  குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். இந்த இலிங்கங்களின் வடிவமைப்பு மற்றும் வழிபாடு போன்றவை படைப்பற்றல் சின்னமாகிய விரைகுறி வழிபாட்டுடன் (phallic worship) தொடர்புபடுத்தப்படுகின்றன. இவை வழிபாட்டில் இல்லை மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

1. உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பிடா (Bhita) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏகமுக இலிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.
2. உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே கங்கலி திலா (Kankali Tila) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள (பதிவு. எண் 83.3).பஞ்சமுக லிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.

இந்தப் பதிவு குடிமங்கலம் சிவலிங்கப் படிமக்கலை பற்றியும் பரசுராமேஸ்வரர் கோவில் கட்டடக்கலை பற்றியும் விவரிக்கிறது.  Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் 1

மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நிகழ்ந்துள்ள இடம் என்பதற்கான அறிகுறி சற்றும் இல்லாமல் அமைதியாகக் காட்சியளிக்கிறது புள்ளலூர் என்ற பொள்ளிலூர் கிராமம். இரத்தமும் இரணமும் தோய்ந்த இந்த மண் பல்லவர் காலத்துப் புகழ்பெற்ற போர்க்களமாகும். பல்லவ சாளுக்கியப் போர் நடந்த இதே குக்கிராமத்தில் 1,161 ஆண்டுகளுக்குப் பிறகு மைசூர் சுல்தானகத்திற்கும் (Sultanate of Mysore) கிழக்கு இந்திய கம்பெனிக்கும் இடையே கி.பி. 1780 ஆம் ஆண்டிலும் கி.பி. 1781 ஆம் ஆண்டிலும் ஆக இரண்டு காலகட்டங்களில் நடந்த போர் இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் என்று பெயர் பெற்றது. புள்ளலூர் கிராமத்தில் கைலாசநாதர் கோவிலும் இராகவப் பெருமாள் கோவிலும் புகழ் பெற்றவை. இங்கு சில கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெருமாள் கோவில் விமானத்தின் செங்கற் கட்டுமானம்  சிதைவுற்று சரிந்து இடிந்து போனது. தற்போது புதிய கோவில் வழிபாட்டில் உள்ளது. இந்தப் பதிவு கி.பி. 619 ஆம் ஆண்டு இதே புள்ளலூர் கிராமத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் மேலைச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே நடைபெற்ற பல்லவ சாளுக்கியப் போர் பற்றியும் புள்ளலூர் கோவில்களைப் பற்றியும் விவரிக்கிறது.
Continue reading

Posted in கோவில், தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்