Tag Archives: சங்க இலக்கியம்

திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை

திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கியுள்ளது. சங்ககாலம் முதல், வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள இவ்வூர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது. எண்பெருங்குன்றங்கள் என்னும் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் ஆகும். லிங்க வடிவில் அமைந்த இம்மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள அமண்பாழி அருகே உள்ள ஒரு குகைததளத்தில் சமணர் கற்படுக்கைகளும், மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலருகில் அமைந்துள்ள சுனையை ஒட்டியுள்ள பாறையில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மலையுச்சியில், காசி விசுவநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள மச்சமுனி சன்னதி அருகேயுள்ள பாறையில் கி.பி 8 – 9 ம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அருகில் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மலையின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குடைவரைக் கோவில் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை, ஒரு குடைவரைக் கோவிலாகும். இங்கு குடைவரைகள் அகழப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி,, துர்காதேவி, கற்பக விநாயர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் (கி.பி. 765-815) படைத்தலைவனான சாத்தன் கணபதி என்பவன் இக்குடைவரைக் கோவிலைச் சிவனுக்காக எழுப்பியதாக ஒரு கல்வெட்டுச் செய்தி பதிவு செய்துள்ளது.
Continue reading

Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், மதுரை, வரலாறு | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சங்க இலக்கியத்தில் சோழர்களின் உறையூர்

காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள உறையூர் கி.மு. 3 ஆம் நூற்றண்டில் இருந்தே சங்க காலத்துச் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்துள்ளது. தித்தன், கரிகால் சோழன், ,குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன், ஆகிய சோழர் கோமரபைச் சேர்ந்த மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் உறையூரினைத் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன..இந்நகரம் ஒரு செழிப்பான வணிக மையமாகவும் திகழ்ந்துள்ளது. Continue reading

Posted in சோழர்கள், தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

புறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்

“துடியன் பாணன் பறையன் காடவன்”ஆகிய நால்வரே தமிழர் எனத் தொல்காப்பியம் கூற இன்று 340 மேற்பட்ட சாதிப்பிரிவுகள் வந்தது எப்படி? இப்போது இருப்பவர் தமிழர்கள் இல்லையா? மதம் மாற முடியும் எப்படிச் சாதி மாற முடியும்? மழுப்பாமல் பதில் அளியுங்கள்.

QUORA கேள்வி பதில் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடை இது. Continue reading

Posted in இலக்கியம், Uncategorized | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்