Tag Archives: சமஸ்கிருதம்

தென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு டிசம்பர் 25, 2019 ஆம் தேதி அன்று, இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) கல்வெட்டியல் கிளை சப்தமாதர்கள் வழிபாட்டின் காலத்தால் மிகவும் முந்தைய கல்வெட்டு ஆதாரங்களை ஆந்திர பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், செப்ரோல் மண்டல், செப்ரோலு கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது
கண்டறிந்துள்ளது. தென்னிந்தியாவில் கண்டறியப்பட்ட மிகவும் முந்தைய சமஸ்கிருத கல்வெட்டும் இதுவே ஆகும். இந்தக் கண்டுபிடிப்பு சமஸ்கிருத மொழியின் பரிணாம வளர்ச்சியைக் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்கிறது. . Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பல்லவர்கள் பேணிக் காத்த காஞ்சிக் கடிகை

தென்னிந்தியாவில் கடிகைகள் வடமொழிக் கல்விச் சங்கங்களாகத் (Academy) திகழ்ந்தன. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து காஞ்சிக் கடிகை பல்லவர்களின் முடியாட்சி (Monarchy), இறைமாட்சி, ஆட்சி அமைப்பு முறை (Polity), அரசியல் (Politics), அமைச்சு (Ministry), படையியல் (Military), குடியியல் (Civics) போன்ற துறைகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் என்று குறள் கூறும் நெறிகளுக்கேற்ப பல்லவ மன்னர்களின் அவையில் இடம்பெற்றிருந்த  கடிகையார் மிகவும் இன்றிமையாத தருணங்களில், அரசின் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் அங்கமாக இருந்தனர். காஞ்சிபுரம், கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல், தட்சஷீலா (கி.மு. 5 – கி.பி. 5 நூற்றாண்டு, பஞ்சாப், பாகிஸ்தான்) , நாளந்தா (கி.பி. 5 – கி.பி. 12, நூற்றாண்டு, பீகார்), விக்ரமஷிலா (கி.பி. 8 – 13 நூற்றாண்டு, பீகார்),   போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைப் போலவே, ஒரு வேதாகமப் பல்கலைக்கழகமாகவும் புகழ் பெற்றிருந்தது. காஞ்சிக் கடிகை காஞ்சிபுரத்தின் மேம்பட்ட வேதக் கல்வி மையம் (Advanced Vedic Education Centre) என்று பரவலாக மதிக்கப்பட்டது. இஃது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களைத் தன்பால் ஈர்த்தது. நாளந்தாவில் இருந்த புத்தமத அறிஞரும் துறவியுமானர் தர்மபால காஞ்சியில் இருந்து வந்தவர் ஆவார். Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்: கூரம் செப்பேடு தெரிவிக்கும் பரமேஸ்வரவர்மனின் பல்லவ நிவந்தம்

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் (विद्यावीनीतपल्लवपरमेश्वरगृहे = வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர க்ருஹே) என்னும் பல்லவர் காலத்துக் கற்றளி காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டாரம், கூரம் (कूरम्) பின் கோடு 631502 கிராமத்தில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 610 – 685),  ‘பரமேசுவர மங்கலம்’ (இன்றைய கூரம்) என்று தன்னுடைய பெயரைக்கொண்டு நிவந்தமாக அளிக்கப்பட்ட நகரில்  இந்த வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் என்ற கற்றளியை கி.பி. 679 ஆம் ஆண்டு கட்டுவித்து வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரருக்கு (சிவனுக்கு) அர்ப்பணித்தார். வித்யா வீனீதன் என்பது பரமேஸ்வரவர்மனின் சிறப்புப் பெயர் ஆகும். வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரரான மூலவர் சதுரவடிவ கூடிய ஆவுடையுடன் கூடிய சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.  இதுவே தமிழகத்தின் முதல் கற்றளியாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.  பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனால் வெளியிடப்பட்ட கூரம் செப்பேடு முதுபெரும் தொல்லியல் அறிஞர் ஹூல்ஷால் (Hultz) கூரம் கோவில் தர்மகர்தாவிடமிருந்து பெறப்பட்டது.   இவ்வறிஞர் இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து South Indian Inscriptions PART-IV, No. 151 A Pallava Grant from Kuram வெளியிட்டுள்ளார். Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்