Tag Archives: சிங்கபூர்

கனியும் மணியும் மின்னூல் செயலி: குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ் கற்பிக்கவும் வசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

தமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள் (Interactive images), அசையும் படங்கள் (Animated images), கலந்துரையாடல் (Discussion) எனப் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் “கனியும் மணியும்”: மின்னூல் செயலி ஆகும். இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் செயலி கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். இந்தச் செயலிக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரான முரசு நெடுமாறனும் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Continue reading

Posted in குழந்தைகள், கைபேசி, சிறுவர் கதைகள், தமிழ் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்