Tag Archives: சிற்பங்கள்

தமிழகத்தில் லகுலீச பாசுபதம். மங்கை ராகவன், சி. வீரராகவன், சுகவன முருகன் (நூலறிமுகம்)

மங்கை ராகவன், சி. வீரராகவன், சுகவன முருகன்  ‘தமிழகத்தில் லகுலீச பாசுபதம்’  என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.  தமிழகத்தில் பாசுபத சைவம் எவ்வாறு பரவியது? தமிழகத்தில் பாசுபத சைவத்தின் தாக்கம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? பாசுபத சைவம் எவ்வாறு தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? இது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்வது கட்டாயம் ஆகும். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நூல் இது. இந்நூல் தமிழக சைவ வரலாற்றுக்கு மிக மிக இன்றியமையாத நூலாகும். இந்நூலை இயற்ற இவர்கள் பயன்படுத்திய படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஆய்வினால் இதுகாறும் இருண்டிருந்த தமிழ் சமயம் மட்டுமல்ல, கலை வரலாறு கூட ஒளிபெற்றுள்ளது. Continue reading

Advertisements
Posted in நூலறிமுகம் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்: உலகப் புகழ்பெற்ற நாயக்கர்கால சிற்பங்கள்

கலையழகு மிளிரும்  16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால சிற்பங்களுக்கும், சிற்பக்கலைக்கும் புகழ் பெற்ற கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும்; பாளையங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம் பஞ்சாயத்து, கிருஷ்ணாபுரம் கிராமம் பின் கோடு 627 759 (அமைவிடம் 8° 36′ 43″ N அட்சரேகை (லாட்டிட்யூடு), மற்றும் 77° 58′ 19″ E தீர்க்கரேகை (லாங்கிட்யூடு). 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 1820 ஆகும். மொத்தம் 905.24 ஹெக்டேர் பரப்பளவுள்ள இவ்வூரில் 484 வீடுகள் உள்ளன.  

பதினாறாம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை வானளாவிய இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கட்டிடக்கலைப்பணியில் அழகுற அமைந்த 16 ஆம் நூற்றாண்டுக் கோவில் இது. இக்கோவிலில் மூன்று பிரகாரங்கள் இருந்துள்ளன. ஆற்காட்டு நவாப் உத்தரவின்படி சந்தா சாஹிப் மூன்றாம் பிரகாரத்தை தரைமட்டமாக்கிவிட்டான். இதுமட்டுமல்ல இடித்த கற்களைக்கொண்டு பாளையங்கோட்டையில் கோட்டை ஒன்றையும் கட்டினானாம். இராஜகோபுரம் தாண்டியவுடன் துவஜஸ்தம்பத்தையும் பெருமாளை நோக்கி அமர்ந்துள்ள கருடனையும் காணலாம். Continue reading

Posted in கோவில், Uncategorized | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக