Tag Archives: சுடுமண் சிற்பம்

மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும்

மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய அருங்காட்சியகம் ஆகும். குஷான வம்சத்தவர்களின் (Kushan Dynasty) (கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டு) மதுரா கலை மரபைச் சேர்ந்த தொல்பொருட்கள், மிகப்பெரிய அளவில், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் இந்த அருங்காட்சியகத்தின் அரிய சேகரிப்புகள் ஆகும். சுடுமண் பொம்மைகள் (Terracota Images), பண்டைய மண்பாண்டங்கள் (Ancient Pottery), களிமண் முத்திரைகள் (Clay Seals), ஓவியங்கள் மற்றும் பல பொருட்களை இங்கு காணலாம்.

கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஏகமுக சிவலிங்கம், புத்தரின் தலை, கனிஷ்கரின் தலையற்ற உருவம், விருக்ஷா தேவி, யக்ஷி போன்ற குஷானர் காலத்துச் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தின் விலைமதிப்பற்ற காட்சிப் பொருளாகக் கருதப்படுகிறன. தொன்மைமிக்கத் தாய் தெய்வத்தின் சிற்பமும் (Archaic Mother Goddess), சுங்க வம்சத்தினர் (Sunga Dynasty) காலத்தைச் சேர்ந்த தட்டுகளும் (Plaques of the Sunga period) இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புக் காட்சிப் பொருட்கள் ஆகும். எனவே இந்த அரசு அருங்காட்சிகம் மதுராவில் கண்டிப்பாகக் காண வேண்டிய சுற்றுலாத் தலம் ஆகும். Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்