Tag Archives: செம்மொழி

தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில்: கடம்பர் வம்ச வரலாற்றையும், பூர்வ ஹளே கன்னட மொழியின் தொன்மையையும் அறிய உதவும் கல்வெட்டுகள்

பிரணவேஸ்வரா கோவில் கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம், சாகர் வட்டம் தலகுண்டாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்ப வம்சத்தவர்களின் கோவிலாகும்.  சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரணவேஸ்வரா கோவில் தலகுண்டாவின் முதன்மையான வசீகரமிக்க கோவிலாகும். தலகுண்டா முன்னர் ஸ்தானகுண்டூர் என்று பெயரிடப்பட்டிருந்தது. இது ஒரு அக்ராஹரம் (வேதபாடசாலை என்னும் ஆன்மீகக் கற்றல் மையம்) ஆகும். இது கர்நாடகா மாநிலத்தில் முதன் முதலாக அங்கீகாரம் பெற்ற ஆக்ரஹரம் ஆகும்.

தலகுண்டாவில் கண்டறியப்பட்ட சில கல்வெட்டுகள் கடம்ப வம்சத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றித் தெளிவு படுத்தியுள்ளன. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட தலகுண்டா தூணின் கல்வெட்டு கடம்ப வம்ச தலைமுறையின் முழு மதிப்பீட்டையும் இவர்களின் அதிகார வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. கடம்ப வம்சம் சுமார் 200 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தார்கள் . கி.பி. 350 இல் மயூரசர்மனால் நிறுவப்பட்டது. கடம்ப வம்சத்தவர்கள் கன்னட மொழி பேசிய கர்நாடக மண்ணின் மைந்தர்கள் ஆவர். அவர்களது வசிப்பிடத்திற்கு அருகில் பல கடம்ப மரங்கள் இருந்ததன் காரணமாகவே கடம்பர் என்று பெயர் பெற்றார்கள்.

இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் (ஏ.எஸ்.ஐ) பாதுகாப்பிலுள்ள இக்கோவில் வளாகத்தில் சில அரிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோவில் பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. ஏ.எஸ்.ஐ பணியாளர்கள் ஒவ்வொரு கல்லையும் நீக்கி அதற்கு வரையறுக்கப்பட்ட இலக்கமிட்டுள்ளார்கள். இவ்வாறு நீக்கிய போது இவ்வளாகத்தில் செப்பேடுகளையும் தங்க நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். தற்போது இக்கோவில் மறுபடியும் கட்டப்பட்டு பழைய வடிவத்தைப் பெற்றுள்ளது. தலகுண்டா தொல்லியல் / வரலாற்று ஆர்வலர் ஒவ்வொருவரும் அவசியம் வருகை புரிய வேண்டிய கோவிலாகும். Continue reading

Posted in கோவில், தொல்லியல், மொழி, வரலாறு | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

வாழப்பள்ளி மகாதேவர் கோவில் செப்பேடும் மலையாள மொழியின் செம்மொழித் தகுதியும்

இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), மலையாள மொழியை இதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language) என்று வகைப்படுத்த வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. இந்த வல்லுநர் குழு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று  அளித்த பரிந்துரையை பண்பாட்டுத் துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. மத்திய அமைச்சரவை இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு  2013 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாளன்று மலையாள மொழியைச் செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது.  வாழப்பள்ளி செப்பேடு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட ஓர் இன்றியமையாத ஆவணம். வாழப்பள்ளி மகாதேவர் கோவில் பற்றிய ஒரு தீர்ப்பாணையும் (decree), திருவாற்றுவையைச் சேர்ந்த சிலரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் ஆகும். இந்தத் தீர்ப்பனையை இரண்டாம் சேரப் பேரரசின் / குலசேகரப் பேரரசின் அரசரான இராஜசேகர வர்மா வெளியிட்டுள்ளார். இந்தச் செப்பேடு எவ்வாறு மலையாளம் செம்மொழி தகுதி பெற உதவியது என்பது பற்றி இந்தப்பதிவு விவரிக்கிறது.
Continue reading

Posted in கேரளா, தொல்லியல், மலையாளம், மொழி | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கலமல்லா தெலுங்கு கல்வெட்டும் தெலுங்கு மொழியின் செம்மொழித் தகுதியும்

தெலுங்கு மொழியில் புகழ்பெற்றதாக அறியப்பட்ட கல்வெட்டுகளில் களமல்லா கல்வெட்டு ரேணாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் வர்மா என்ற மன்னன் காலத்தியது ஆகும்.. ஆந்திரப் பிரதேச மாநிலம், ஒய்.எஸ்.ஆர். மாவட்டம், எர்ரகுண்டலா மண்டல், களமல்லா கிராமத்தில் சென்னகேசவப் பெருமாள் கோவிலில் கண்டறியப்பட்ட உடைந்த தூணில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டைத் தற்போது காணவில்லை. இக்கல்வெட்டின் எழுத்தமைதியை ஆய்ந்தபின் இதன் காலம் கி.பி. 575 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்று கல்வெட்டாய்வாளர்கள் நம்புகிறார்கள். தெலுங்கு மொழியைச் செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்க இக்கல்வெட்டை இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு (Union Ministry for Culture, Government of India), சான்று ஆவணமாகச் சமர்ப்பித்தனர்.மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பர் மாதத்தில் தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது.
Continue reading

Posted in தொல்லியல், மொழி | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்