Tag Archives: சேரமான் பெருமாள்

இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.

இரண்டாம் சேர குலமரபில் வந்த அரசர்கள் பெருமாள்கள் (Perumals) என்றும் சில சமயங்களில் குலசேகரர்கள் (Kulasekharas) என்றும் அழைக்கப்பட்டனர். இரண்டாம் சேர வம்சத்தவர்களின் அரசு (second Chera kingdom) நிறுவப்பட்டு, கி.பி 9 ஆம் நூற்றாண்டில், பெருமாள் அரசர்களின் ஆட்சி (rule of the Perumals) தொடங்கியது. மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த குலசேகரர்களின் ஆட்சி சேரர் (கேரள) வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்தப் பெருமாள் குல அரசர்கள் கி.பி 800 முதல் கி.பி 1124 வரை அன்றைய சேரநாட்டை ஆண்டு வந்ததாகக் கருதப்பட்டது. எலம்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை மற்றும் எம். ஜி. எஸ். நாராயணன் போன்றவர்கள் இடைக்காலச் சேரர்களின் வரலாற்றைப் பல்வேறு கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். மகோதயபுரம் குலசேகரர்களின் ஆட்சிக்காலம் குறித்த வரலாறு, அறிஞர்களிடையே வாதவிவாதப் பொருளாக இருந்து வருகிறது. Continue reading

Posted in கேரளா, சேரர்கள், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இரணியல் அரண்மனை: அழிவின் விளிம்பில் வேணாடு சேரர்களின் அரண்மனை

சேரமான் பெருமாள் என்ற வேணாட்டுச் சேர மன்னர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டிய அரண்மனை மற்றும் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போதைய பத்மநாபபுரம் அரண்மனையைப் போலக் கட்டப்பட்ட மரத்தாலான அரண்மனை, பிற்காலத்தில் ஓடு வேயப்பட்டுள்ளது. படிப்புரா, குதிரமாளிகா, வசந்தமண்டபம் ஆகிய மூன்று பகுதிகள் இந்த அரண்மனையில் காணப்படுகின்றன.வசந்தமண்டபத்தின் பள்ளியறையில் பளிங்கில் செதுக்கப்பட்ட கட்டில் பலரையும் கவர்ந்து வருகிறது. ஓடு வேய்ந்த இரட்டைத் தளக் கட்டடங்கள் சிதைந்து போய்விட்டன. பலர் மரங்களைத் திருடிச் சென்றுவிட்டனர். கி.பி. 1601 ஆம் ஆண்டு சேரமான் பெருமாள் வம்சத்தினர் பத்மநாபபுரத்திற்குத் தலைநகரை மாற்றியதால் இரணியல் அரண்மனை சிதைந்து, புதர் மண்டி ஆழிந்து வருகிறது. Continue reading

Posted in கேரளா, சுற்றுலா, தொல்லியல், மலையாளம், வரலாறு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்