Tag Archives: சைவத் திருமுறைகள்

ஜீவசமாதி: திருமூலரின் திருமந்திரம் காட்டும் இலக்கணங்கள்

தவநெறியில் திளைத்த  சித்தர்கள், யோகிகள், ஞானிகள் ஆகியோர் தங்கள் உடலைக் கோவிலாகக் கருதுவது சித்தர் மரபு. உலக வாழ்க்கையில் இறைவனால் பணிக்கப்பட்ட கடமைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றிய பின்னர் இவ்வுலகில் சாதிப்பதற்கு எதுவுமில்லை என்ற எண்ணம் தோன்றிய பிறகு .முக்தி அடைவதை “சமாதி நிலையை” அடைவது என்று கூறுவதும் சித்தர் மரபாகும். அஷ்டாங்க யோகத்தின் உச்சம் சமாதி நிலையை அடைவது ஆகும்.
யோகிகளும் ஞானிகளும் தங்கள் மனதை இறைவனுடன் இரண்டறக் கலக்கச் செய்துவிட்டு லாம்பிகா யோகத்தின் வாயிலாக உயிரை உடலோடு சுவரச் செய்தபின் இந்த அண்டத்திலேயே நிலைத்திருக்கும்படி செய்து விடுவார்கள். இவர்களுடைய மன இயக்கம் நின்றிருக்கும். ஆனால் உயிர் உடலை விட்டுப் பிரிவதில்லை. இந்த முறையில் சமாதியடைந்த சித்தர்கள், யோகிகள், ஞானிகளை இவர்களது சீடர்கள் ஜீவசமாதி அமைக்கப்பார்கள். இவர்கள் ஜீவசமாதி அமைப்பதற்காக முறையான சில சடங்குளைச் செய்வது வழக்கம். இந்தச் சடங்குகளுக்குச் ‘சமாதிக்கிரியை’ என்று பெயர். ஜீவசமாதியை அமைப்பதற்கான இடத்தேர்வு, குழி தோண்டுதல், நிலவறையை அமைக்கும் முறைமை போன்ற சடங்குகளைப் பற்றித் திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் “சமாதிக் கிரியை” பதிகத்தில் விளக்கியுள்ளார்.
இவர்களுடைய உடலை  மண்ணில் அடக்கம் செய்வித்த இடமே ஜீவசமாதி ஆகும். இவ்வாறு மண்ணில் அடக்கம் செய்விக்கப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து வெவ்வேறு இடங்களில் நடமாடி மீண்டும் அடக்கமாகிறார்கள். இதனால் நாட்டு மக்கள் வாழ்வில் வளம் பெருகும், நல்வாழ்வு சிறக்கும், நல்லருள் சித்திக்கும். சித்தர்களின் ஞானமரபில் அமைந்துள்ள  ஜீவசமாதிகள் இந்துமதக் கோவில்களுக்கு இணையான புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Continue reading

Posted in சைவ சமயம், தத்துவம், தமிழ் | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்