Tag Archives: தமிழ்நாடு

திருநந்திக்கரை குடைவரைக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம்

திருநந்திகரை குகைக் கோவில், ஒரு குடைவரைக் கோவிலாகும். இது நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலின் ஒரு பகுதியாகும். இக்குடைவரைக் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்; கல்குளம் வட்டம், திருநந்திக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் தொன்மையான குடைவரைக் கோவிலாகக் கருதப்படுகிறது. கி.பி. 8 ஆம் ஆண்டில் அகழப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில், சமண மதத்தின் தொன்மைமிக்க கோவிலாகவும் கருதப்படுகிறது. இக்குடைவரை முகப்பு, மண்டபம், முகமண்டபம், உள்மண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.இக்குடைவரையில் நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, படியெடுக்கப்பட்டுள்ளன.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சமணர்களால் அகழப்பட்ட இக்குடைவரை பிற்காலத்தில் பிராமணீய இந்துக் கோவிலாக மாற்றப்பட்டது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வீரநந்தி என்ற சமண முனிவர் இந்தக் கோவிலில் தங்கி சமண சமயப்பணி ஆற்றியுள்ளார். முதலாம் இராஜராஜ சோழன் முட்டம் என்ற ஊரைக் கைப்பற்றி அதற்கு மும்முடி சோழ நல்லூர் என்று பெயர் மாற்றம் செய்வித்தான். கி.பி. 1003 ஆம் ஆண்டு, இம்மன்னன் இக்கோவிலில் தங்கித் தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான் Continue reading

Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா

புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் நார்த்தாமலை, செவலூர் மலை மற்றும் அன்னவாசல் மலை ஆகிய மலைகளும் (Hills) தனிக்குன்றுகளும் (Knolls) ஆங்காங்கே காணப்படுகின்றன.. இங்கிருந்து நிலப்பரப்பு தட்டையாக கிழக்கு நோக்கிச் சரிகிறது. கிழக்கில் கழிமுகங்களும் நீண்ட கடற்கரையும் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருங்கற்கால ஈமக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சமணர்களின் தொன்மைமிக்க பல நினைவுச் சின்னங்கள் இந்த மாவட்டத்தில் சிதறிக் கிடக்கின்றன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள சோழர்கள் – பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த கருங்கற்றளிகள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒரே பதிவில் இந்த மாவட்டத்தின் சிறப்புகளைப் பதிவு செய்வது மிகவும் கடினமான பணி. இதன் காரணமாகவே இந்தப் பதிவு சற்று விரிவாக அமைந்துள்ளது. Continue reading

Posted in குகைகள், குடைவரைக் கோவில், கோவில், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு

சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும். சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத இடம்பிடித்துள்ள சாம்பார் தமிழ் மரபு சார்ந்த துணைக்கறி உணவு என்று பலர் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தனர். இனி அவ்வாறு பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. இந்த சாம்பார் மராத்தியர்கள் தமிழகத்திற்கு மராத்தியர்கள் அளித்த கொடை என்று தஞ்சை மராத்தியர் வரலாறு பதிவு செய்துள்ளது. முதலாம் சாஹூஜி போன்சலே காலத்தில் தான் தஞ்சை அரச மாளிகையின் சாரு விலாச போஜன சாலையில் சாம்பார் முதன் முதலாகச் சமைக்கப்பட்டது. இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. எப்படிச் சாம்பார் சமைக்கப்பட்டது என்று பார்ப்போமா? Continue reading

Posted in உணவு, குழந்தைகள், சிறுவர் கதைகள், வரலாறு | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்