Tag Archives: தமிழ் பிராமி

கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் மறைந்தார்

மிகச் சிறந்த கல்வெட்டு எழுதியல் அறிஞரான பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்கள் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 26 2018) அதிகாலை 4 மணி அளவில் காலமானார். .

இவர் நீண்ட நாள்களாகவே உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இவரது இறுதிச் சடங்கு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நவம்பர் 26 2018 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 

இவர் மிகச் சிறந்த களப்பணியாளர் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் இவர் ஆற்றிய பணிகள் போற்றுதற்குரியது. தமிழ் பிராமி ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழ்ந்த இவர் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சிந்துசமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் ஆவார். இவரது மறைவு தமிழுக்கும் தொல்லியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். Continue reading

Posted in தொல்லியல், மொழி, வரலாறு | Tagged , , , , | 8 பின்னூட்டங்கள்

தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமணம் செழித்தோங்கியது. இம்மாவட்டத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கிப் பல சமண சமயச் சான்றுகள் கிடைத்துள்ளன. செஞ்சி வட்டத்தில் உள்ள மலைக்குன்றுகளில் 2000 ஆண்டுகள் பழமையான சமணர் குகைத் தளங்களும், கற்படுக்கைகளும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பாறைகளில் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன.

தொண்டூர் கிராமத்தின் அருகே பஞ்சனாப்பாடி என்ற மலைக்குன்றில் அமைந்துள்ள இயற்கையான சமணர் குகைத் தளம், கற்படுக்கைகள், 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைக் காணலாம். கல்வெட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமணர் குகைத்தளம் தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் இல்லாதது வியப்புக்குரியது.  பராமரிப்பு இல்லாமல் பாழடையும் இந்த நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். 

தொண்டூர் அருகே வயல் வெளியில், விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் தனிப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியில் விஷ்ணு வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த அனந்தசயன விஷ்ணுவின் நீண்ட கிரீடமகுடம் கம்போடிய படிமவியல் கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது.    கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல், படிமக்கலை, வரலாறு | Tagged , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

நூல் அறிமுகம்: தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம், செந்தீ நடராசன்.

திரு. செந்தீ நடராசன் எழுதி வெளியிட்டுள்ள ‘தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் ‘பழந்தமிழ் எழுத்து வடிவங்களான தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்க நூல்.’ இந்நூலாசிரியர் செந்தீ நடராசன் அவர்கள் ஒரு சிறந்த கல்வெட்டு ஆய்வாளர். இவருக்கு கல்வெட்டுத்துறை பற்றிய அறிமுகத்தையும் ஆர்வத்தையும் தூண்டிய திரு.தே.கோபால் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.  Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக