Tag Archives: திரட்டி

தமிழ் வலைப்பதிவகம்: தமிழ் வலைத்தளப் பதிவாளர்களுக்குப் பயனுள்ள வாட்ஸ் அப் திரட்டி

தமிழ் மொழியில் வலைத்தளத்தில் பதிவிடுவோர் தொகை கணிசமாகப் அருகி வருகிறது. முகநூல் மற்றும் டுவிட்டரில் நிறைய குழுக்கள் வந்துவிட்டன. கூகுளில் பல மன்றங்கள் (Forum) வந்து செயல்படுகின்றன. தமிழில் பல வலைத்தள பதிவுத் திரட்டிகள் தோன்றினாலும் பலவற்றின் செயல்பாடுகள் மட்டாகவே உள்ளன.

இந்த நிலையில் புதுக்கோட்டை வலைத்தளப் பதிவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியது. இவர்கள் சென்ற ஆண்டு நடத்திய பயிற்சிப் பட்டறை வலைத்தளப் பதிவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்மையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மூத்த வலைத்தளப் பதிவர்களான திரு. முத்து நிலவன் அவர்களும், திரு.மீரா செல்வகுமார் அவர்களும், திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இணைந்து “தமிழ் வலைப்பதிவகம்” என்னும் பெயரில் தமிழ் வலைத்தளப் பதிவர்களுக்கான வாட்ஸ் அப் திரட்டி ஒன்றை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாளன்று உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இந்த “தமிழ் வலைப்பதிவகம்” ஓராண்டை நிறைவு செய்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. தமிழ் வலைத்தளப் பதிவர்கள் செய்தியறிந்து சிறிது சிறிதாக தங்களை இணைத்துக்கொண்டு வருகிறார்கள். Continue reading

Posted in இணையம், கைபேசி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக