Tag Archives: திருவிசநல்லூர்

சிவயோகிநாதர் கோவில், திருவிசநல்லூர்: சோழர் கால சூரிய ஒளி கடிகாரம்

யோகநாதீஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவில். இறைவன் யோகநாதீஸ்வரர் என்ற சிவயோகிநாதர். அம்பிகை சவுந்திரநாயகி என்ற சாந்தநாயகி. திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 43 ஆம் தலம். கோவிலின் தென்புறம் அமைந்துள்ள மதிற்சுவருக்கு அருகில், அம்மன் சன்னதிக்கு எதிரில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான சூரியஒளி கடிகாரம் அமைந்துள்ளது. இரண்டாம் பராந்தக சோழன் என அழைக்கப்படும் சுந்தர சோழன் (957–973 AD) காலத்தில் அமைப்பட்டதாகக் கருதப்படும் இச்சுவர்க் கடிகாரம் சூரிய ஒளி முள்ளின் மீது ஏற்படுத்தும் நிழலின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயங்க பேட்டரி தேவையில்லை. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சூரியனின் இயக்க அடிப்படையில் கணக்கிட்டு இக்கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in கோவில், வரலாறு, Uncategorized | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக