Tag Archives: துர்காபூஜா

நவராத்திரி விழா: இந்தியாவின் வண்ணமிகு திருவிழா

இந்தியாவில் மக்கள் ஒரே பண்டிகையை தங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே கொண்டாடுகிறார்கள். நவராத்ரி விழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நவம் என்றால் ஒன்பது என்று பொருள்; இராத்திரி என்றால் இரவு. தென்னிந்தியாவில் ஒன்பது இரவுகளில் துர்கா, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவிகளுக்கு தலா மூன்று இரவுகளை ஒதுக்கி கொண்டாடுவது மரபு. கிழக்கு மாநிலங்களில் நவராத்திரிக்கு துர்க்கா பூஜை என்று பெயர். டெல்லி பகுதிகளில் ராம்லீலா (இராவண வாதம் அல்லது இராமனின் வெற்றி) என்றால் நவராத்திரி எனலாம். மேற்கு மாநிலங்களில் (குஜராத் மற்றும் சில மாநிலங்கள்) நவராத்திரி, கற்பா-தண்டியா என்னும் நடன விழாவாகும்.
Continue reading

Posted in இந்தியா, விழாக்கள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக