Tag Archives: துவாரபாலகர்கள்

பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2

முதல் குடைவரையிலிருந்து 64 படிகளைக் கடந்து சென்றால் உங்கள் வலது புறத்தில் பாதாமியின் இரண்டாவது குடைவரைக் கோவிலைக் காணலாம். விஷ்ணுவே இக்குடைவரையின் மூலவர் ஆவார். இக்குடைவரையில் விஷ்ணுவின் அவதாரங்களான வராஹர், திரிவிக்கிரமன் ஆகியோரைக் காட்டும் சிற்பத் தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை கி.பி. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டதாகும். பாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரை அமைக்கப்பட்டதாக நம்ம்பபடுகிறது. இந்த இரண்டாம் குகையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் இரண்டாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது. Continue reading

Advertisements
Posted in தொல்லியல் | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவில் மற்றும் மலைக்கோட்டை

திருமெய்யம் குன்றின் செங்குத்தான தென்முகச் சரிவில் சத்தியகிரீஸ்வரருக்கும் (சிவன்) திருமெய்யருக்கும் (பெருமாள்) குடைவரை குகைக்கோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துள்ளது. சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோவிலில் முகப்பு, முகமண்டபம் மற்றும் கருவறை ஆகிய உறுப்புகள் உள்ளன. பிற்காலத்து இணைப்பாகத் தூண்களுடன் கூடிய மண்டபங்கள், பரிவார தேவதைகளுக்கான கருவறைகள் மற்றும் இராஜகோபுரம் ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த இந்தச் சன்னதிகளின் தொகுப்புக் கீழக்கோவில் என்றறியப்படுகிறது. மெய்யமலையின் பாறைச் சுவற்றில்தான் அழிக்கப்பட்ட இசைக்கல்வெட்டும் அதன் மேல் அப்பண்ணா தண்டநாயகர் தலையேற்ற மெய்யம் சபையின் (தீர்ப்பாயத்தின்) தீர்ப்பும் பொறிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் நீளமான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. அர்த்தமண்டப நுழைவாயிலில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இரண்டு துவாரபாலகர்கள் காவல் புரிகிறார்கள். இவர்கள் சிவனுடைய ஆயுதங்களைத் தாங்கிய சிவ-துவாரபாலகர்கள். சத்தியமூர்த்தி-திருமெய்யர் குடைவரையை ஒப்பிடும்போது சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோவிலில் நிறையக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

எதிரிகளிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாக்க அளவில் சிறியதாய் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டு, ஏழு சுற்று மதில்களால் உருவாக்கப்பட்ட திருமயம் கோட்டையில் இன்று மூன்று சுற்று மதில்களை மட்டும் காண முடிகிறது. வெளிச்சுற்று மதில்கள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதில்கள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. Continue reading

Posted in கோவில், தொல்லியல் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக