Tag Archives: தொல்லியல்

கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம்

பண்டைத் தமிழ் வணிகர்கள் தொடக்கத்தில் மரக்கலங்களில் இந்தோனேசிய தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் சென்று கடல்சார் வணிகம் மேற்கொண்டனர். அரேபியர்கள் வாசனைப் பொருட்களைத் தமிழர்களிடமிருந்து பெற்று மேற்குலக நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். பின்னாட்களில் தமிழர்கள் நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு சீனாவுடன் கடல்சார் வணிகம் மேற்கொண்டனர். சீனத்துப் பண்டங்களை ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்தார்கள். கடல்சார் வணிகமும் கடற்பரப்பும் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

கி.பி. 6 ஆம் நூற்றண்டில் தென்கிழக்காசியாவின் ஸ்ரீவிஜய பேரரசு சீன நாட்டு வாணிகம் தங்கள் மூலம்தான் நடக்கவேண்டும் என வணிகக் கட்டுப்பாடுகள் விதித்தது. கடற்பகுதியையும் கடல் வணிகத்தையும் பாதுகாப்பதற்காக முதலாம் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்தான் பதின்மூன்று தென்கிழக்காசிய நாடுகளை வென்று தமிழர்களின் கடல்சார் வணிக மேலாதிக்கத்தை நிலைநாட்டியதால் கடாரம் கொண்டான் என்ற விருதுப்பெயர் பெற்றான். 

இராஜேந்திர சோழன் வென்ற கடாரம், மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியாகும். இது மிகத் தொன்மையான மாநிலம் ஆகும். கெடா துவா (Kedah Tua) என்னும் பண்டைய நாகரிகம் கி,மு. 535 ஆம் ஆண்டுகளில் கெடாவில் தழைத்தோங்கி இருந்தது. இது தென்கிழக்காசியாவின் மிகத்தொன்மையான நாகரிகம் ஆகும். கெடா துவா நாகரிகம், ஜாவாவில் கி.பி. 9 நூற்றண்டில் நிலவிய போரோபுதூர் (Borobudur) நாகரிகத்திற்கும், கம்போடியாவில் கி.பி. 12 ஆம் நூற்றண்டில் நிலவிய அங்கோர்வாட் நாகரிகத்திற்கும் முந்தையது என்று இப்பகுதியில் 1936 -1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் நிரூபித்து வருகின்றன. இங்குக் கண்டறியப்பட்ட சண்டி என்னும் வழிப்பாட்டுக் கட்டமைப்புகள், தொல்லியல் சின்னங்கள், உடைந்த சிற்பங்கள் எல்லாம் இந்து மற்றும் பெளத்த சமய நாகரிகத்தின் தாக்கங்களை உறுதிப் படுத்துகின்றன. இது கடாரம் பற்றிய இரு பதிவுகள் கொண்ட தொடராகும்.

கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம்
கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்

இத்தொடரின் முதல் பதிவு இதுவாகும். Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல் | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

திருப்பத்தூர் அருகே, ஏலகிரி மலையடிவாரத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு

திருப்பத்தூருக்கு அருகே ஏலகிரி (Yelagiri) மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டுரெட்டியூர் (Gundureddiyur) கிராமத்தில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் சில சுய ஆர்வலர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும், “தொழிற்சாலை குடியிருப்பு (வாழ்வியல்) மேட்டைக்” (Industrial settlement Mound) கண்டறிந்துள்ளனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்கள் தலைமையில் சுயஆர்வலர்கள் இடம்பெற்ற தொல்லியல் குழுவினர் குண்டுரெட்டியூர் கிராமப் பகுதிகளையொட்டி வழக்கமான களப்பணி மேற்கொண்டபோது இந்தத் தொல்பழங்கால மனிதர்களின் வாழ்வியல் மேடு கண்டறியப்பட்டது. இது பற்றிய விரிவான செய்தியினைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்: கூரம் செப்பேடு தெரிவிக்கும் பரமேஸ்வரவர்மனின் பல்லவ நிவந்தம்

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் (विद्यावीनीतपल्लवपरमेश्वरगृहे = வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர க்ருஹே) என்னும் பல்லவர் காலத்துக் கற்றளி காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டாரம், கூரம் (कूरम्) பின் கோடு 631502 கிராமத்தில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 610 – 685),  ‘பரமேசுவர மங்கலம்’ (இன்றைய கூரம்) என்று தன்னுடைய பெயரைக்கொண்டு நிவந்தமாக அளிக்கப்பட்ட நகரில்  இந்த வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் என்ற கற்றளியை கி.பி. 679 ஆம் ஆண்டு கட்டுவித்து வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரருக்கு (சிவனுக்கு) அர்ப்பணித்தார். வித்யா வீனீதன் என்பது பரமேஸ்வரவர்மனின் சிறப்புப் பெயர் ஆகும். வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரரான மூலவர் சதுரவடிவ கூடிய ஆவுடையுடன் கூடிய சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.  இதுவே தமிழகத்தின் முதல் கற்றளியாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.  பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனால் வெளியிடப்பட்ட கூரம் செப்பேடு முதுபெரும் தொல்லியல் அறிஞர் ஹூல்ஷால் (Hultz) கூரம் கோவில் தர்மகர்தாவிடமிருந்து பெறப்பட்டது.   இவ்வறிஞர் இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து South Indian Inscriptions PART-IV, No. 151 A Pallava Grant from Kuram வெளியிட்டுள்ளார். Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்