Tag Archives: நாகரா கலைப்பாணி

பிர்லா மந்திர், ஹைதராபாத்

பிர்லா மந்திர் தெலிங்கானா மாநிலம், ஹைதராபாத்  நகரின் ஆதர்ஷ் நகர் காலனி, (பின் கோடு 500063) காசி பஜார் (Gasi Bazar), காகர்வாடியில்  (Kakarwadi) அமைந்துள்ளது. இக்கோவில் உசைன்சாகர் ஏரியின் தென்கரையில், 85 மீ. (280 அடி) உயரம் கொண்ட நௌபத் பர்பத் (Naubat Parbat) என்னும் காலா பஹத் குன்றின் (Kala Pahad Hillock) மேல், 13 ஏக்கர் (53,000 சதுர மீ.) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 டன் தூய இராஜஸ்தான் வெள்ளைச் சலவைக் கல் கொண்டு பிர்லா அறக்கட்டளையால் (Birla Foundation) கட்டுவிக்கப்பட்ட இக்கோவில் வேங்கடேஸ்வரருக்கு அற்பணிக்கப்படுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இராமகிருஷ்ணா மிஷனரியைச் சேர்ந்த சுவாமி அரங்கநாதானந்தா 1976 ஆம் ஆண்டில் திறந்து வைத்துள்ளார். இதன் அமைவிடம் :17.4061875°N அட்சரேகை 78.4690625°E தீர்க்கரேகை ஆகும். Continue reading

Posted in கோவில் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்

இமயமலையின் தௌலதார் மலைத்தொடரின் பியாஸ் நதி பாயும் நிலப்பரப்பில் உள்ள ஓர் அழகிய குன்றின் உச்சியில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் என்னும் வகையிலான குடைவரைக் கோவில்கள் (Masrur Monolithic Rock-cut Temples, also known as Masroor Monolithic Rock-cut Temples) அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரைக் கோவில் ஒற்றைக்கல்லில் அகழப்பட்ட கோவில் தொகுதி ஆகும். இக்கோவில் அருமை அழகுடன் உங்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் இடமாகும். இஃது இமயமலையின் பிரமிடு என்று, இப்பகுதி மக்களால், அன்புடன் அழைக்கப்படுகிறது.

இக்கோவில்கள் இந்தோ-ஆரிய கலைப்பாணியில் (Indo-Aryan Style), நாகரா கட்டடக்கலை மரபில் (Nagara Architectural Tradition) அகழப்பட்ட 15 குடைவரைக் கோவில்களின் தொகுதி (Group of 15 Rock-cut Temples) ஆகும். இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் மிகவும் அறியப்படாத கோவில்களில் ஒன்றான இது, தனித்துவம் மிக்க ஒற்றைக்கல் கட்டுமானம் ஆகும். இஃது இந்தியாவின் முக்கியமான குடைவரைக் கோவில்களில் ஒன்றாக எண்ணப்படுகிறது. மாமல்லபுரத்தின் ஐந்து இரதங்கள் (ஒற்றைக்கல் மண்டபங்கள்), இராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணனால் அகழப்பட்ட எல்லோரா 16 ஆம் குகை எண் கொண்ட கைலாசநாதர் கோவில், தர்மநாத் கோவில், தம்மர் (Dharmanath temple at Dhammar) (இராஜஸ்தான்) போன்ற குடைவரைக் கோவில்களுக்கு இணையாக மஸ்ரூர் கோவில் தொகுதி   எண்ணப்படுகிறது. Continue reading

Posted in குடைவரைக் கோவில், கோவில், சுற்றுலா, படிமக்கலை | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்