Tag Archives: நாட்டுப்புறவியல்

அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்

‘அழகர் கோயில்’ என்னும் பண்பாட்டாய்வு நூலை, பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் எழுதி வெளியிட்டுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் வெளியிடப்பட்ட இந்நூல் இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976 – 79 ஆம் ஆண்டுகளில் அழகர் கோயில் குறித்து மேற்கொண்ட கள ஆய்வுகள், ஆய்வேடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

அழகர்கோயில் குறித்த ஆய்வு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டார்களின் வழிபாட்டுச் சடங்குகளையும், நம்பிக்கைகளையும், செவிவழிக் கதைகளையும், வர்ணிப்புப் பாடல்களையும் பண்பாட்டுக் கூறுகளாகப் பார்க்கும் ஆய்வு முறைமை வரலாற்றாய்விற்குப் புதியது. கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்பு குறிப்பிட்ட சாதிகளை முன்னிறுத்தி ஆராயப்பட்டது. மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்துக் கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வு முறைமை புதுமையானதும் முழுமையானதும் ஆகும். கோயில் ஆய்வுகளுக்கு, பேராசிரியர். தொ.பரமசிவன் அவர்கள் மேற்கொண்ட இந்தக் கள ஆய்வு முன்னோடியாகத் திகழ்கிறது. Continue reading

Posted in கோவில், தமிழ்நாடு, நூலறிமுகம், விழாக்கள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக