Tag Archives: பாகுபலி

இராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

நீங்கள் உங்கள் வார விடுமுறையை முழுமையாகச் செலவிட்டு ஓய்வெடுக்கவோ அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அற்புதமான நேரத்தைச் செலவிடவோ அல்லது உங்கள் புது மனைவியுடன் தேன்நிலவு செல்லவோ விரும்புகிறீர்களா? ராமோஜி ஃபிலிம் சிட்டியில், உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாகவே, நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் சிறப்பாக அனுபவித்து மகிழலாம்.

இராமோஜி ஃபிலிம் சிட்டி அல்லது இராமோஜி திரைப்பட நகரம் (Ramoji Film City) 1996 ஆம் ஆண்டில் இராமோஜி குழுமத்தால் (Ramoji Group of Companies) திட்டமிட்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய திரைப்பட நகரம் ஆகும். ஹைதராபாத் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில், 674 ஹெக்டேர் (1666 ஏக்கர்) பரப்பளவில், உலகத் தரத்துடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு வசதிகளுடன், பரந்து விரிந்த இந்தத் திரைப்பட நகரம் மில்லியன் கனவுகள் நகரம் (Land of Million Dreams) என்று விவரிக்கப்படுகிறது. ஆரவாரமிக்க பகட்டான அமைவிடம், அழகான நிழற்சாலைகள், தத்ரூபமான திரைப்படச் செட்டுகள் மற்றும் தலைசிறந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய சாலைகள் மற்றும் பல தலைப்புகளில் அமைந்த பூங்காக்கள் (Theme Parks on Various Subjects) எல்லாம் இந்த வளாகத்தைத் திரைப்படத் தயாரிப்பளர்களின் மிகப்பெரிய சொர்க்கம் என்றும் சித்தரிக்கிறார்கள்.

இந்தச் செல்லுலாய்டு வளாகத்தில் நுழைந்தால் கனவுகள், கற்பனை உலகங்கள், எல்லாம் உருமாற்றம் பெற்றுத் திரைப்படங்களாக்கும் வித்தையை நேரிடையாகக் காணலாம். உங்களுடைய குழந்தை உள்ளமும், ரசிகத்தன்மையையும், உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வமும் இங்குள்ள பல திரைப்படச் செட்டுகளுடன் ஒன்றுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் சினிமா இரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் பல இந்த அற்புதமான இடங்களை நீங்கள் இந்த வளாகத்தில் காணலாம். Continue reading

Posted in சுற்றுலா, திரைப்படம் | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 4

பாதாமியின் நான்காம் குடைவரை, மூன்றாம் குடைவரையை அடுத்து, கிழக்குத் திசையில் சுமார் பத்து அடி தாழ்வாக அமைந்துள்ளது. பாதாமியின் நான்கு குடைவரைகளுக்குள் இதுவே மிகவும் சிறியது. இது சமண சமயத்தின் ஞான நிலையை அடைந்த மனிதர்களும் ஆன்மீக சமய குருவுமான சமண தீர்தங்கர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கருவறையில் மகாவீரர் சிற்பம் இடம்பெற்றுள்ள காரணத்தால் இக்குடைவரை மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள.

கி.பி. எழாம் நூற்றாண்டின் இறுதியில், பாதாமியின் மூன்று குடைவரைகளை அகழ்ந்த பிறகு, நான்காவதாக அகழப்பட்டுள்ளது. இக்குடைவரை இந்து சாளுக்கிய மன்னர்களால் சமண தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சில அறிஞர்கள் இக்குடைவரை கி.பி. எட்டாம் நூற்றண்டில் அகழப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். மற்ற குடைவரைகளைப் போலவே, நான்காம் குடைவரை விரிவான செதுக்கல்களையும் பல்வேறு அழகணிகளையும் பெற்றுள்ளன. சில அழகணிகள் (embellishments) கி.பி. 11 அல்லது 12 நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சமணத் தீர்தங்கர்களான பாகுபலி, பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் உடன் மற்ற தீர்த்தங்கரர்கள் குறியீட்டுக் காட்சியாக சிற்பத் தொகுப்புகளில் காட்டப்பட்டுள்ளனர். இந்தப் பதிவு பாதாமியின் நான்காம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல் | Tagged , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

கணக்குவேலம்பட்டி, அரவக்குறிச்சி, மொட்டையாண்டவர் கோவில் சிற்பம் சமண தீர்த்தங்கரரா? புதிய ஆய்வுகள்.

தொல்லியல் ஆர்வலர்கள் இந்தப் புடைப்புச் சிற்பத் தொகுதியை (Bas Relief Panel) பாகுபலி என்றும் சமண தீர்த்தங்கரர் என்றும் வாதிடுகிறார்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கணக்குவேலம்பட்டியில் வசிக்கும் உள்ளூர் மக்களோ இந்த “மொட்டைஆண்டவரை”, முருகன் என்ற ஒரு வடிவத்தில் வணங்கி, விழா எடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள். தொல்லியல் ஆய்வுகள் தொடர்கின்றன. Continue reading

Posted in கோவில், சமண சமயம், தமிழ்நாடு, தொல்லியல், மதம் | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்