Tag Archives: பாண்டியர்கள்

திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை

திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கியுள்ளது. சங்ககாலம் முதல், வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள இவ்வூர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது. எண்பெருங்குன்றங்கள் என்னும் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் ஆகும். லிங்க வடிவில் அமைந்த இம்மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள அமண்பாழி அருகே உள்ள ஒரு குகைததளத்தில் சமணர் கற்படுக்கைகளும், மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலருகில் அமைந்துள்ள சுனையை ஒட்டியுள்ள பாறையில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மலையுச்சியில், காசி விசுவநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள மச்சமுனி சன்னதி அருகேயுள்ள பாறையில் கி.பி 8 – 9 ம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அருகில் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மலையின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குடைவரைக் கோவில் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை, ஒரு குடைவரைக் கோவிலாகும். இங்கு குடைவரைகள் அகழப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி,, துர்காதேவி, கற்பக விநாயர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் (கி.பி. 765-815) படைத்தலைவனான சாத்தன் கணபதி என்பவன் இக்குடைவரைக் கோவிலைச் சிவனுக்காக எழுப்பியதாக ஒரு கல்வெட்டுச் செய்தி பதிவு செய்துள்ளது.
Continue reading

Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், மதுரை, வரலாறு | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

வரலாற்றில் விழிஞம்: பண்டைய துறைமுக நகரத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

விழிஞம் அரபிக் கடற்கரையில், கலங்கரை விளக்கமும் இயற்கைத் துறைமுகமும் கொண்ட ஒரு சிறிய மீன்பிடி கிராமம் ஆகும். பிரபல சுற்றுலாத் தலமான கோவளம் கடற்கரை அருகே விழிஞம் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழிஞம் துறைமுகம் கிழக்கு மேற்கு வணிக வழியின் முக்கியமான இடத்தில் அமைந்திருந்தது. இடைக்காலத் தமிழ் கல்வெட்டு, விழிஞத்தை மலைநாட்டின் தலைநகராகக் குறிப்பிடுகிறது, மேலும் இவ்வூர் விலின்டா (Vilinda), விலினம் (Vilinam) அல்லது விலூனம் (Vilunum) என்றெல்லாம் அழைக்கப்பட்டது. சோழர்கள் இவ்வூரைக் கைப்பற்றியதும், இராஜேந்திர சோழபட்டினம் என்றும் குலோத்துங்க சோழபட்டினம் என்றும் பெயர் மாற்றம் செய்தனர். இந்த நகரத்தைக் கைப்பற்றுவதற்காகவே, கி.பி. 8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே, ஆய், சேரர், பாண்டியர் மற்றும் சோழ அரசர்களிடையே பல போர்கள் நிகழ்ந்தன. ஆய் வம்சத்தினர் இப்பகுதியில் தங்கள் அரசை முதன்முதலாக நிறுவியிருந்தனர்.

கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய் வம்சத்தின் கோட்டையைக் கண்டறிவதற்காக, அண்மையில் விழிஞத்தைச் சுற்றி தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் மூலம் அரிய தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது விழிஞம் இந்தியாவின் எதிர்கால நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இத்துறைமுகக் கட்டுமானங்களை அதானி போர்ட்ஸ் லிமிடெட் கட்டிவருகிறது.
Continue reading

Posted in குடைவரைக் கோவில், கேரளா, வரலாறு | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சங்க இலக்கியத்தில் கொற்கை முத்து, முத்துக்குளித்தல், கடல் வணிகம் பற்றிய செய்திகள்

சங்க இலக்கியம் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் பண்டைய தமிழகத்தில் பாண்டிய நாட்டின் கொற்கைத் துறையில் கிடைத்த உலகப் புகழ்பெற்ற முத்துக்கள் பற்றியும் இப்பகுதியில் செழித்தோங்கிய முத்துக்குளித்தல் தொழில்  பற்றியும் ரோம் மற்றும் அரேபிய நாடுகளுக்கு முத்து ஏற்றுமதியானது குறித்தும் பதிவு செய்துள்ளன. இந்தப்பதிவில் முத்து பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வழங்க ஒரு சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்ய வேண்டுகிறேன். Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்