Tag Archives: பாதாமி

பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2

முதல் குடைவரையிலிருந்து 64 படிகளைக் கடந்து சென்றால் உங்கள் வலது புறத்தில் பாதாமியின் இரண்டாவது குடைவரைக் கோவிலைக் காணலாம். விஷ்ணுவே இக்குடைவரையின் மூலவர் ஆவார். இக்குடைவரையில் விஷ்ணுவின் அவதாரங்களான வராஹர், திரிவிக்கிரமன் ஆகியோரைக் காட்டும் சிற்பத் தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை கி.பி. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டதாகும். பாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரை அமைக்கப்பட்டதாக நம்ம்பபடுகிறது. இந்த இரண்டாம் குகையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் இரண்டாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1

பாதாமி குடைவரைகள், கர்நாடகா மாநிலம், பகால்கோடு மாவட்டம், பாதாமி வட்டம், பாதாமி (Badami) (Kannada (ಬಾದಾಮಿ) பின் கோடு 587201 என்னும் நகரில் அமைந்துள்ளது. இயற்கை அரணாக மணற்கற் குன்றுகளால் சூழப்பட்டுள்ள பாதாமிப் பள்ளத்தாக்கை மலப்பிராபா நதி பாய்ந்து செழுமைப்படுத்துகிறது. கி.பி. ஆறாம் நூற்றண்டில் பாதாமி சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக உயர்ந்த இந்த நகரத்தில் சாளுக்கிய மன்னர்கள் தங்கள் கலைத் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளக் குடைவரைக் கோவில்களையும் கட்டுமானக் கோவில்களையும் அமைத்தனர். முதலாம் புலிகேசியால் ஒரு கோட்டையும் அமைக்கப்பட்டது. பாதாமியை ஆண்டுவந்த முதலாம் கீர்த்திவர்மன், முதலாம் மங்களேசன் ஆகிய மன்னர்கள் நான்கு குடைவரைகளை இங்குள்ள உயர்ந்த மணற்குன்றுகளில் அகழ்ந்தனர். இந்தப் பதிவு சாளுக்கிய வரலாறு, முதலாம் குடைவரை பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

பாதாமி: பூதநாதா கோவில், மல்லிகார்ஜுனா கோவில் மற்றும் அகஸ்தியர் தீர்த்தக்குளம்

பூதநாதா கோவில்களின் தொகுதி (Bhutanatha group of temples) கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டம் பாதாமியில் (Badami) உள்ள புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றாகும். பூதநாதா கோவில்களின் தொகுதி அகஸ்தியர் (ஏரி) தீர்த்தக் குளத்தைச் சுற்றி அமைந்துள்ளன. அகஸ்தியர் தீர்த்த  குளத்திற்கு (Agasthiya Theertha Tank) கிழக்கில் மல்லிகார்ஜுனா கோவிலும் குளத்திற்கு வடகிழக்கில் பூதநாதா கோவிலும் அமைந்துள்ளன. பாதாமியில், வாதாபி சாளுக்கியர்களின் கட்டிடக்கலை நம்மை வசீகரிக்கிறது. வாதாபி சாளுக்கியர்களும் மற்றும் கல்யாணி சாளுக்கியர்களும் விட்டுச் சென்ற கட்டிடக்கலை மரபு, இவர்கள் காலத்திய கோவில் கட்டிடக்கலை பற்றிய மகத்தான திறமை மற்றும் கட்டற்ற ஆர்வம் ஆகியவற்றைச் சித்தரிக்கின்றன. பரந்து விரிந்த இந்தப் பாரம்பரிய வளாகம் பல சுவாரஸ்யமான தலைசிறந்த படைப்புகளைக் கொண்டுள்ளது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , | 13 பின்னூட்டங்கள்