Tag Archives: பிராமி

தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில்: கடம்பர் வம்ச வரலாற்றையும், பூர்வ ஹளே கன்னட மொழியின் தொன்மையையும் அறிய உதவும் கல்வெட்டுகள்

பிரணவேஸ்வரா கோவில் கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம், சாகர் வட்டம் தலகுண்டாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்ப வம்சத்தவர்களின் கோவிலாகும்.  சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரணவேஸ்வரா கோவில் தலகுண்டாவின் முதன்மையான வசீகரமிக்க கோவிலாகும். தலகுண்டா முன்னர் ஸ்தானகுண்டூர் என்று பெயரிடப்பட்டிருந்தது. இது ஒரு அக்ராஹரம் (வேதபாடசாலை என்னும் ஆன்மீகக் கற்றல் மையம்) ஆகும். இது கர்நாடகா மாநிலத்தில் முதன் முதலாக அங்கீகாரம் பெற்ற ஆக்ரஹரம் ஆகும்.

தலகுண்டாவில் கண்டறியப்பட்ட சில கல்வெட்டுகள் கடம்ப வம்சத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றித் தெளிவு படுத்தியுள்ளன. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட தலகுண்டா தூணின் கல்வெட்டு கடம்ப வம்ச தலைமுறையின் முழு மதிப்பீட்டையும் இவர்களின் அதிகார வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. கடம்ப வம்சம் சுமார் 200 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தார்கள் . கி.பி. 350 இல் மயூரசர்மனால் நிறுவப்பட்டது. கடம்ப வம்சத்தவர்கள் கன்னட மொழி பேசிய கர்நாடக மண்ணின் மைந்தர்கள் ஆவர். அவர்களது வசிப்பிடத்திற்கு அருகில் பல கடம்ப மரங்கள் இருந்ததன் காரணமாகவே கடம்பர் என்று பெயர் பெற்றார்கள்.

இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் (ஏ.எஸ்.ஐ) பாதுகாப்பிலுள்ள இக்கோவில் வளாகத்தில் சில அரிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோவில் பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. ஏ.எஸ்.ஐ பணியாளர்கள் ஒவ்வொரு கல்லையும் நீக்கி அதற்கு வரையறுக்கப்பட்ட இலக்கமிட்டுள்ளார்கள். இவ்வாறு நீக்கிய போது இவ்வளாகத்தில் செப்பேடுகளையும் தங்க நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். தற்போது இக்கோவில் மறுபடியும் கட்டப்பட்டு பழைய வடிவத்தைப் பெற்றுள்ளது. தலகுண்டா தொல்லியல் / வரலாற்று ஆர்வலர் ஒவ்வொருவரும் அவசியம் வருகை புரிய வேண்டிய கோவிலாகும். Continue reading

Posted in கோவில், தொல்லியல், மொழி, வரலாறு | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்