Tag Archives: புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் புதுக்கோட்டை நகரின் திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ளது. 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மன்னர்களால் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியம் 107 வருடங்களாக பல காட்சிக்கூடங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான தொல்பொருட்கள் இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 

சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடி, தமிழ் நாட்டின் இரண்டாம் இடத்திலுள்ள அரசு அருங்காட்சியகம் இது. இந்த பல்நோக்கு அருங்காட்சியகம் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் இவ்வருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியர் பொறுப்பிலுள்ளது. Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , | 1 பின்னூட்டம்