Tag Archives: புவி ஈர்ப்பு விசை

மாமல்லபுரத்துப் புதிர்: கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து என்னும் வான் இறைக் கல்

கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து அல்லது வான் இறைக் கல் (Stone of the Sky God) என்று மாமல்லபுரம் பொதுமக்களால் அழைக்கப்படும்,  இந்தப் பெரிய, உருண்டை வடிவப் பாறாங்கல் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதன் மர்மம் இன்றுவரை புரியவில்லை. மாமல்லபுரத்திற்கு அன்றாடம் வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாறைக் கல்லை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.  இந்தப் பாறைக்கல் உருண்டை 5 மீட்டர் விட்டமும், 6 மீட்டர் உயரமும், 250 டன் எடையும் கொண்டது. இதன் எடையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் இருந்து உருண்டோடி சமதளத்தில் நின்றிருக்கவேண்டும். எந்த விதப் பிடிப்பும் இல்லாமல் சாய்வான தளத்தில் நிற்பது வியப்பிறகுரியதாகும். 
Continue reading

Posted in அறிவியல், சுற்றுலா | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்