Tag Archives: பூஜ்ஜியம்

பக்சாலி கையெழுத்துச் சுவடியில் பூஜ்ஜியத்தின் குறியீடு

மூன்றாம் நூற்றாண்டிலேயே இந்தியர்கள் பூஜ்ஜியதைப் பயன்படுத்தியதை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் போட்லியன் நூலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. பக்சாலி கையெழுத்துச் சுவடியில் மேற்கொண்ட முந்தைய ஆய்வுகளில் பூஜ்ஜியத்தின் காலம் கி.பி.8 அல்லது கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் பக்சாலி கையெழுத்து சுவடியின் காலம், 500 வருடங்கள் முன்பு, அதாவது கி.பி. 224 ஆம் ஆண்டிற்கும் கி.பி. 383 ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலம் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Continue reading

Posted in அறிவியல், இந்தியா, சுவடியியல் | Tagged , , , | 9 பின்னூட்டங்கள்