Tag Archives: பூதநாதா கோவில்

பாதாமி: பூதநாதா கோவில், மல்லிகார்ஜுனா கோவில் மற்றும் அகஸ்தியர் தீர்த்தக்குளம்

பூதநாதா கோவில்களின் தொகுதி (Bhutanatha group of temples) கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டம் பாதாமியில் (Badami) உள்ள புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றாகும். பூதநாதா கோவில்களின் தொகுதி அகஸ்தியர் (ஏரி) தீர்த்தக் குளத்தைச் சுற்றி அமைந்துள்ளன. அகஸ்தியர் தீர்த்த  குளத்திற்கு (Agasthiya Theertha Tank) கிழக்கில் மல்லிகார்ஜுனா கோவிலும் குளத்திற்கு வடகிழக்கில் பூதநாதா கோவிலும் அமைந்துள்ளன. பாதாமியில், வாதாபி சாளுக்கியர்களின் கட்டிடக்கலை நம்மை வசீகரிக்கிறது. வாதாபி சாளுக்கியர்களும் மற்றும் கல்யாணி சாளுக்கியர்களும் விட்டுச் சென்ற கட்டிடக்கலை மரபு, இவர்கள் காலத்திய கோவில் கட்டிடக்கலை பற்றிய மகத்தான திறமை மற்றும் கட்டற்ற ஆர்வம் ஆகியவற்றைச் சித்தரிக்கின்றன. பரந்து விரிந்த இந்தப் பாரம்பரிய வளாகம் பல சுவாரஸ்யமான தலைசிறந்த படைப்புகளைக் கொண்டுள்ளது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , | 13 பின்னூட்டங்கள்