Tag Archives: பெண் விடுதலை

‘அக்னிசாட்சி (புதினம்), ‘அந்தர்ஜனம் – ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுகள்’ : கேரளத்து நம்பூதிரிகள் இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் பற்றி விவரிக்கும் இரண்டு நூல்கள் அறிமுகம்

பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் பெண்ணியவாதிகள், வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் குரல் எழுப்பியுள்ளனர். கேரளாவில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைப் பற்றிப் பேசும்போது, நம்பூதிரி (கேரளத்துப் பிராமணர்கள்) இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைப் பற்றியும் ஆணாதிக்க சமுதாயம் விதித்த எண்ணற்ற அடக்குமுறைக் கட்டுப்பாடுகள் பற்றியும் கட்டாயம் பேசத்தான் வேண்டும். இளம் விதவைகள் உள்ளிட்ட நம்பூதிரிப் பெண்களின் உரிமை எவ்வாறெல்லாம் மறுக்கப்பட்டது? முதலில் இவர்கள் பெண்கள் என்பதானாலும் கேரளத்தின் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதனாலும் வீட்டிற்குள்ளேயே அடக்கி வைத்து அடிமைப்படுத்திக் கொடுமை செய்யப்பட்டார்கள்.

கீழ்ககாணும் இரண்டு நூல்களும் ஆணாதிக்கம் மிகுந்த நம்பூதிரி வகுப்பில் நிலவிய பெண்ணடிமைக் கொடுமைகள் குறித்த விரிவான தகவல்களைப் பதிவு செய்துள்ளன.

1. லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதி, 1976 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட புதினமான ‘அக்னிசாட்சி,’ (അഗ്നിസാക്ഷി) (ஆங்கில மொழிபெயர்ப்பு வசந்தி சங்கரநாராயணன்) வெளியீடு Oxford University Press, 1980 பக். 208.
2. தேவகி நிலையங்கோடு எழுதி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாழ்க்கை நினைவுக் குறிப்பான ‘அந்தர்ஜனம்: ஒரு நம்பூரிப் பெண்ணின் நினைவுகள்’ (അന്തർജനം: ഒരു നമ്പൂതിരി സ്ത്രീയുടെ ഓർമ്മക്കുറിപ്പുകൾ) (ஆங்கில மொழிபெயர்ப்பு, இந்திரா மேனன் மற்றும் ராதிகா மேனன்) வெளியீடு Oxford University Press, 2012. பக். 111

‘அக்னிசாட்சி’ என்ற புதினமும் ‘அந்தர்ஜனம்’ என்ற வாழ்க்கை நினைவுக் குறிப்பும் அக்காலத்தில் நிலவிய பெண்ணடிமை முறையினை விவரிக்கும் நேரடி சாட்சிகளாகும். நம்பூதிரிகள், சாதியின் பெயரால் தன் இனத்துப் பெண்களின் மீது விதித்த கடுமையான சாதிக்கட்டுப்பாடுகளும் அடக்குமுறையும், பெண்ணடிமை வாழ்க்கை குறித்த சமூகப் பிரச்சனைகளையும் இவர்களுடைய எழுத்துக்களில் நாம் காணலாம். Continue reading

Posted in கேரளா, பெண் விடுதலை, மலையாளம் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்