Tag Archives: பெற்றோர்கள்

குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்?

நாம் எல்லோருக்கும் கதை கேட்க விருப்பம் உண்டு. குழந்தைகளுக்கு கதை கேட்க மிகவும் பிடிக்கும். நாம் குழந்தைகளாக இருந்தபோது நம் பெற்றோர்கள் நமக்குக் கதை சொல்லுவதை தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் ஏராளமான நீதிக்கதைகளையும்  கேட்டு வளர்ந்துள்ளோம். ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு வீடு தான் பள்ளிக்கூடம்.காலங்காலமாக நம் வீடுகளில் கதை சொல்வதன் மூலமாகத்தான் குழந்தைகளுக்குக் கல்வி  புகட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கூட்டுக் குடும்பங்களின் வரமான  தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது கதைகளையும் சேர்த்து ஊட்டினார்கள். இன்று கூட்டுக் குடும்ப அமைப்புகள் வழக்கொழிந்து போய்விட்டன. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, ஆகிய கதை சொல்லிகளை நாமும் நம் குடும்பங்களும் இழந்துவிட்டது உண்மை.

கதை சொல்லுதல் / கதை கேட்டல் குழந்தையின் சிந்திக்கும் ஆற்றலையும், கவனிப்புத் திறனையும் (Listening Skills), உரையாடல் திறனையும் (Conversational Skill),  மொழித் திறனையும் (Language Skills), சமூகம் மற்றும் உணர்வுசார் திறனையும் (Social and Emotional Skills) மேம்படுத்தும். Continue reading

Posted in குழந்தைகள் | Tagged , , , | 5 பின்னூட்டங்கள்