Tag Archives: பைரவகோண

பைரவகோண குடைவரைக் கோவில்கள், ஆந்திரப் பிரதேசம்

பைரவகோண எட்டுக் குடைவரைக் கோவில்களின் .தொகுப்பாகும். இக்குடைவரைக் கோவில்கள் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், சந்திரசேகரபுரம் மண்டல், சந்திரசேகரபுரம் (Chandra Sekhara Puram) பின் கோடு 523112 நகருக்கு அருகில் அடர்ந்த நல்லமலா காட்டில் (Nallamala forest) பைரவகோண அமைந்துள்ளது. இங்கு எட்டு குடைவரைக் கோவில்கள் மாமல்லபுரம் சாயலில் அமைந்துள்ளன. இந்த எட்டுக் குடைவரைகளும் கருங்கல் குன்றின் ஒரு சரிவில் அகழப்பட்டுள்ளன. இக்குடைவரைகளில் நேர்தியாகச் செதுக்கப்பட்ட தூண்கள், கருவறை, சிற்பத்தொகுப்புகள் போன்ற கட்டிடக்கலை உறுப்புகளைக் காணலாம். பைரவகோண குடைவரைகள் மாமல்லபுரத்தின் சாயலையும் ராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர்களின் சில சாயல்களையும் காணமுடியும். Continue reading

Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்