Tag Archives: பொம்மலகுட்டா

பொம்மலகுட்டா சமண யாத்திரைத் தலமும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேமுலவத சாளுக்கியரின் மும்மொழிக் கல்வெட்டும்

ஆந்திரப்பிரதேச மாநிலம், கரீம்நகர் மாவட்டம் குரிக்கியாலா கிராமத்தில் அமைந்துள்ள பொம்மலகுட்டா குன்றின் மீது, இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனின் கீழ் ஆட்சிபுரிந்து வந்த வேமுலவத சாளுக்கிய (Chalukyas of Vemulavada) மன்னன் இரண்டாம் அரிகேசரி (கி.பி. 930-55) காலத்தில் ஆதிகவி பம்பாவின் இளைய சகோதரரான ஜீனவல்லபா,  திரி-புவனா-திலக என்னும் பெயர் தாங்கிய சமண யாத்திரைத் தலத்தை அமைத்துள்ளார். இக்குன்றின் உச்சியில் உள்ள பாறை ஒன்றின் மீது சமண இயக்கி (யட்சி) சக்ரேஸ்வரியின் புடைப்புச் சிற்பமும், இச்சிற்பத்தைச் சுற்றி காயோசர்க்க கோலத்தில் எட்டு சமணர்களின்   புடைப்புச் சிற்பங்களும் நான்கு தொகுப்புகளாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத் தொகுப்பிற்கு நேர் கீழே இரண்டாம் அரிகேசரியின் பதினோரு வரிக் கல்வெட்டு தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் சிறந்த கவிஞராகத் திகழ்ந்த பம்பாவின் புரவலர் அரிகேசரி ஆவார். இந்த சமணக் கவிஞரின் பரம்பரை மற்றும் கவித்திறன் பற்றிய சிறப்பான செய்திகளை இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்