Tag Archives: மண்டபம்

கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்

பண்டைத்தமிழர் கடல்சார் வணிகம், ஸ்ரீவிஜய பேரரசின் கடல்சார் வணிக ஏகபோகம், கடற்பகுதியையும் கடல் வணிகத்தையும் பாதுகாப்பதற்காக முதலாம் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்பு மேற்கொண்டு பதின்மூன்று தென்கிழக்காசிய நாடுகளை வென்ற செய்தி; மலேசிய நாட்டின் கெடா மாநிலம், கெடா துவா (Kedah Tua) என்னும் பகுதியில் கி,மு. 535 ஆம் ஆண்டுகளில், தழைத்தோங்கி பண்டைய நாகரிகம், கி.பி 1936 -1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், இங்குக் கண்டறியப்பட்ட சண்டி என்னும் வழிப்பாட்டுக் கட்டமைப்புகள், தொல்லியல் சின்னங்கள், உடைந்த சிற்பங்கள் பற்றியெல்லாம் முதல் பதிவில் கூறியிருந்தேன்.

கெடா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற லெம்பா புஜாங் (Lembah Bujang) பகுதி கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே விரைவான வளர்ச்சியை எவ்வாறு அடைந்தது? இப்பகுதி பாதுக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் ஒன்றாக மாறியது ஏன்? எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இது போன்ற கேள்விகளுக்கான விடை இந்த இரண்டாம் பதிவில் இடம்பெற்றுள்ளது. இந்து பெளத்த வழிபாட்டுத் தலங்களாகிய சண்டிகளும் தொல்பொருட்களும் இங்கு கண்டறியப்பட்டன. இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் பற்றியும் இப்பதிவு விவரிக்கிறது.

இது கடாரம் பற்றிய இரு பதிவுகள் கொண்ட தொடராகும்.

கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம்
கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்

இத்தொடரின் இரண்டாம் பதிவு இதுவாகும். Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்