Tag Archives: மதனப்பள்ளி

ஹார்ஸ்லி ஹில்ஸ்: ஆந்திரப் பிரதேசத்தின் ஊட்டி!

ஆந்திரப் பிரதேசத்தின் ஊட்டி என்று சொல்லப்படும் ஹார்ஸ்லி ஹில்ஸ் ஒரு பிரபலமான மலை ரிஸார்ட்டும், கண்ணுக்கினிய மலைவாழிடமும் ஆகும். குறுகிய மலைப்பாதையின் இரு மருங்கிலும் அடர்த்தியாக ஓங்கி உயர்ந்து வளர்ந்த யூகலிப்டஸ், குல்மோஹர், அலமண்டா, ஜகராண்டா போன்ற மரங்களைக் காணலாம். தூய்மையான சூழல், மனதிற்கினிய வானிலை, கண்ணுக்கினிய காட்சிகள் எல்லாம் உங்களைப் பரவசப்படுத்துவது உறுதி. எழில்மிகுந்த விடுமுறை வாசஸ்தலமான ஹார்ஸ்லி ஹில்ஸ் உங்களுக்குப் புத்துணர்ச்சி தருவதுடன் கோடைகாலத்தின் புழுக்கமான உஷ்ணத்திலிருந்து உங்களை விடுவித்து மிகுந்த இதமளிக்கும். பச்சைப் பசேலென்று மரங்கள் மலைச் சரிவில் அடர்த்தியாய் வளர்ந்துள்ளன. ஹார்ஸ்லி ஹில்ஸ் செல்லும் மலைப்பாதையில் பயணிக்கும்போது வன விலங்குகளையும், பசுமையான தாவர இனங்களையும் காண்பது உங்களுக்கு முழு உற்சாகம் தரும். கவர்ச்சிமிக்க மலர்கள் உங்கள் காலடியில்பட்டுப் பறந்து செல்லும். இந்த மலைச் சரிவு முழுதும் சம்பங்கி மலர்களின் மனம் காற்றில் தவழும்.

ஜோர்பிங் எனப்படும் ஒளி புகும் பந்துகளின் உள்ளே இருந்தபடி மலைச் சரிவில் உருளுவது, ராப்பெல்லிங் எனப்படும் மலைக்கயிற்றிறக்கம் போன்ற சாகச விளையாட்டுக்களை வழங்கும் சில இடங்களில் ஹார்ஸ்லி ஹில்ஸும் ஒன்றாகும். மல்லம்மா கோவில், ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளிக்கூடம் போன்ற சிறப்பாம்சங்கள் இங்கு உண்டு. கம்பீரமான வானிலை, இந்த மலை வாழிடத்தின் குளிர் காற்று எல்லாம் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும். ஹார்ஸ்லி ஹில்ஸ் மியூசியம், சுற்றுச் சூழல் பூங்கா, கௌடின்யா வன விலங்கு சரணாலயம், கங்கோத்ரி ஏரி மற்றும் காலிபந்தாரே போன்றவை பயணிகளை வசீகரிக்கும் சுற்றுலாத் தலங்களாகும். Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக