Tag Archives: மதுரை

திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை

திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கியுள்ளது. சங்ககாலம் முதல், வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள இவ்வூர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது. எண்பெருங்குன்றங்கள் என்னும் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் ஆகும். லிங்க வடிவில் அமைந்த இம்மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள அமண்பாழி அருகே உள்ள ஒரு குகைததளத்தில் சமணர் கற்படுக்கைகளும், மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலருகில் அமைந்துள்ள சுனையை ஒட்டியுள்ள பாறையில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மலையுச்சியில், காசி விசுவநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள மச்சமுனி சன்னதி அருகேயுள்ள பாறையில் கி.பி 8 – 9 ம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அருகில் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மலையின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குடைவரைக் கோவில் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை, ஒரு குடைவரைக் கோவிலாகும். இங்கு குடைவரைகள் அகழப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி,, துர்காதேவி, கற்பக விநாயர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் (கி.பி. 765-815) படைத்தலைவனான சாத்தன் கணபதி என்பவன் இக்குடைவரைக் கோவிலைச் சிவனுக்காக எழுப்பியதாக ஒரு கல்வெட்டுச் செய்தி பதிவு செய்துள்ளது.
Continue reading

Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், மதுரை, வரலாறு | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம்

தற்காலிக கீழடி அருங்காட்சியகம், மதுரை நகரில்(பின் கோடு 625020) மருத்துவர் தங்கராசு சாலையில், சட்டக் கல்லூரி அருகில், அமைந்துள்ள மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவது தளத்தில் மூன்று அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  முதல் இரண்டு அறைகளில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கீழடியில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் அறையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் முப்பரிமானத் தொழில்நுட்பம் மூலம் மாதிரிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இந்த அருங்காட்சியகத்தை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். இது பற்றிய விரிவான பதிவு இதுவாகும். Continue reading

Posted in தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கள்ளழகர் கோயில், அழகர் கோயில்

மதுரை நகரைச் சுற்றி இயற்கை எழில் நிறைந்த இடங்கள் என்று அழகர்கோயில், புல்லூத்து, நாகதீர்த்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். படிக்கும் காலத்தில் அழகர்கோயிலுக்கு நான் அடிக்கடி சென்று வந்ததுண்டு. காலையில் பஸ் பிடித்து அழகர்கோயிலுக்குச் சென்று கோயில், மலை எல்லாம் சுற்றிவிட்டு மாலையில் வீடு திரும்பியதுண்டு. அப்போது அவ்வளவு கூட்டம் இல்லை; மரங்களடர்ந்த காடுகள், எங்கும் பசுமையான சூழல். ஓங்கி உயர்ந்த கோபுரம், அழகிய சிற்பங்கள் நிறைந்த மண்டபத்தூண்கள், இன்றும் அழகுறக் காட்சியளிக்கும் ஓவியங்கள், பதினெட்டாம்படிக்கருப்புக்கு பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் கிராமத்து மனிதர்கள், திவ்யதேச பெருமாளை சேவிக்கும் வைணவர்கள், ஜில்லென்று தண்ணீருடன் நூபுரகங்கை தீர்த்தத் தொட்டி, மாதவி மண்டபத்தின் ராக்காயி அம்மன், சலலக்கும் சிலம்பாறு, வேல்வணக்கத்தில் தொடங்கிய பழமுதிர்ச்சோலை முருக வழிபாடு இவை எல்லாம் அழகர்கோயிலின் சிறப்பு அம்சங்கள். சங்க இலக்கியங்கள் இக்கோயில் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆறு ஆழ்வார்கள் பெருமாளை சுந்தரத் தமிழில் பாடியுள்ளார்கள். இந்த பதிவு அழகர்கோயிலைப் பற்றி..
Continue reading

Posted in கோவில், வரலாறு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக