Tag Archives: மாநில தொல்லியல் துறை

திரிபுனித்துரா மலை மாளிகை (அரண்மனை) மற்றும் அருங்காட்சியகம்

திரிபுனித்துரா மலை மாளிகை (கனக்கக்குன்னு அரண்மனை), கி.பி. 1855 ஆம் ஆண்டு முதல், முந்தைய கொச்சி அரசர்களின் அரசவையாகவும் வாழ்விடமாகவும் (Royal Court and Official Residence) திகழ்ந்தது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் கொச்சி அரசமரபினர் மகோதயபுரம் பெருமாள்களின் (பிற்காலச் சேரர்களின்), தாய்வழி வாரிசுரிமை முறையின்படி வந்த வழித்தோன்றல்கள் ஆவர். இந்த மாளிகையின் பழைய கட்டமைப்புகள் கி.பி. 1853 மற்றும் 1864 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். கேரளாவின் கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியான திரிபுனித்துராவில் கனக்கக்குன்னு என்ற குன்றின் மீது அமைந்துள்ள இந்த மாளிகை, தற்போது கேரள மாநில தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் முழு அளவிலான பண்பாடு மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் (Ethno-Archaeological Museum) செயல்பட்டுவருகிறது. தொன்மை மிக்க இந்த அரச மாளிகையை ஒரு அரும்பொருள் களஞ்சியம் என்று கூறலாம்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பூங்கா, மான் பூங்கா, கலாச்சார அருங்காட்சியகம், ஆகிய பல வசதிகளை உள்ளடக்கிய இந்த சுற்றுலாத் தலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். புகழ்பெற்ற மலையாள திரைப்படமான மணிச்சித்ரத்தாழு இங்கே படமாக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

Continue reading

Posted in கேரளா, சுற்றுலா, வரலாறு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம்

தற்காலிக கீழடி அருங்காட்சியகம், மதுரை நகரில்(பின் கோடு 625020) மருத்துவர் தங்கராசு சாலையில், சட்டக் கல்லூரி அருகில், அமைந்துள்ள மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவது தளத்தில் மூன்று அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  முதல் இரண்டு அறைகளில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கீழடியில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் அறையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் முப்பரிமானத் தொழில்நுட்பம் மூலம் மாதிரிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இந்த அருங்காட்சியகத்தை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். இது பற்றிய விரிவான பதிவு இதுவாகும். Continue reading

Posted in தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பென்னேஸ்வரமடம் கோவில் கல்வெட்டு: ஹோய்சாள மன்னர் வீர ராமநாதன் எவ்வாறு ஊழலைக் கட்டுப்படுத்தினார்?

அருள்மிகு வேதநாயகி சமேத பென்னேஸ்வர நாயனார் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் வட்டாரம் (Block),  பென்னேஸ்வரமடம் (Panneswaramadam), பின் கோடு 635112 (காவேரிபட்டிணம் அஞ்சல் நிலையம்), பென்னேஸ்வரமடம் – அகரம் சாலையில்,  தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 40 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் ஹோய்சாள மன்னன் வீர ராமநாதன் பொறித்த கல்வெட்டு ஒன்று இலஞ்சம் வாங்குவதோ கொடுப்பதோ குற்றம் என்று கருதி, லஞ்சம் வாங்கிய அல்லது கொடுத்த நபருக்கும், அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க ஆணை பிறப்பித்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்