Tag Archives: மின்னூல்கள்

அமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி?

ஒரு புத்தகத்தை, வெளியிடும் தருவாயில்  வைத்துக்கொண்டுள்ள நூலாசிரியர், இரண்டு வழிகளில் வெளியிடலாம்: 1. மரபு வழியில் அச்சிட்டு ஒரு பதிப்பாளர் (publishing house) வாயிலாக வெளியிடுவது; 2. ஆசிரியரே தன் புத்தகத்தைச் சுயமாக அச்சிட்டு வெளியிடுதல் (self-publishing). சில காலத்திற்கு முன்பு வரை சிறந்த எழுத்தாளர்கள் கூட தங்கள் நூல்களை வெளியிட பதிப்பகங்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது. தற்போது புத்தகத்தை சுயமாக அச்சிட்டு வெளியிடும் முறையே பரவலாகி வருகிறது. சுயமாகப் புத்தகம் வெளியிடுவது பற்றி ஆய்வு மேற்கொண்டோர் அமேசான் கே.டி.பி (Kindle Direct Publishing (K.D.P.) பற்றி எளிதாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள். கிண்டில் நேரடி வெளியீடு கே.டி.பி. என்றால் என்ன?  தமிழ் நூலாசிரியர்கள் இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? கிண்டில் நேரடி வெளியீடு பற்றிய நிறை குறைகளையும் கே.டி.பி. செலெக்ட் பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம். Continue reading

Posted in இணைய நூலகம், தமிழ் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

தமிழில் மின்னூல்கள்: அமேசான் கிண்டில் இ-புக்ஸ், கூகுள் பிளே மற்றும் சிறு தரவுத் தளங்கள்

கணினியில் iOS, Android, Mac மற்றும் PC களுக்கான இலவச அமேசான் கிண்டில் செயலிகள் இலவசமாகக் கிடைக்கிறது. இதனைக் கணினியில் கூகுள் பிளே ஸ்டார் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டார், அல்லது அமேசான் கிண்டில் ஆப் போன்ற இயங்குதளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அமேசானில் தற்போதுள்ள மின்னூல்கள், ஏற்கனெவே அச்சு வடிவில் வெளியிடப்பட்ட நூல்களாகும். இந்த மின்னூல்கள் அமேசானின் இந்திய தளத்தில் மட்டும் விற்பமனையாகின்றன.
நீங்கள் வைத்துள்ள ஆண்ட்ராய்டு டேப்லெட், கிண்டில், நூக் போன்ற எந்தக் கருவியை வேண்டுமானாலும் பயன்படுத்திப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். கிண்டில் அன்லிமிடெட் என்று ஒரு திட்டமும் உள்ளது. இது தற்போது பயன்படுத்திவரும் லெண்டிங் லைப்ரரி திட்டம் போன்றதுதான். அமேசானின் போட்டி நிறுவனமான கூகுள் பிளே புக்ஸ் சேவையும் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்களை வழங்கி வருகிறது. Continue reading

Posted in இணைய நூலகம் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அமேசான் கிண்டில்: மின்னூல்களை வாசிக்கும் கருவி மாடல்கள் (அறிமுகம்)

நாம் கணினியை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். கணினியில் பல மென்பொருட்கள் வந்துவிட்டன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அச்சடித்த புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகிறது. கணினியில் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஸ்கேன் செய்யப்பட்ட நூல்கள், பி.டி.எஃப் வடிவக் கோப்புகள், மற்றும் மின்னூல்கள் எல்லாம் வந்துவிட்டன. புத்தகங்களும் மின்வடிவம் பெற்று வரத்தொடங்கிப் பல நாட்கள் கடந்துவிட்டன. பி.டி.எஃப் வடிவக் கோப்புகளைப் போலவே இபப் (epub) மற்றும் மொபி (mobi) வடிவக் கோப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த மின்னூல்களைப் படிப்பதெற்கென்று பிரத்யோகக் கருவிகள் வடிவமைக்கப்பட்டன. மின்னூல்களை எளிதாக வாசிக்க சோனி நிறுவனத்தின் சோனி ஈ-ரீடர் (Sony e-Reader), பார்ன்ஸ் அன் நோபிள் நிறுவனத்தின் நூக் (NOOK), ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு (iPAD) பலகைக் கணினி போன்ற கருவிகள் வெளியிடப்பட்டன.

டிஜிட்டல் மியூசிக் உலகத்தில் மாபெரும் வெற்றி பெற்றதைப்போல, புத்தக உலகிலும் வெற்றிபெற அமேசானின் ஜெஃப் பிஸோஸ் (Jeff Bezos) விரும்பினார். அமேசான்.காம் (Amazon.com) நிறுவனத்தின் மூலம் கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்நூல்களை வாசிக்கக் கிண்டில் என்ற கருவியை 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். ஒரே நேரத்தில் எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் மின்னூல்களை வெளியிடும்படி தூண்டினார். இன்று அமேசான்.காம் வணிக இணையதளத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான மின்னூல்கள் விற்பனைக்குக் காத்திருக்கின்றன. இந்தப் பதிவு அமேசான்.காம் நிறுவனம் வெளியிட்டு சந்தைப்படுத்தி வரும் கிண்டில் மின்னூல் படிக்கும் கருவி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் கிண்டில் கருவி வாங்க முடிவெடுத்தால் இவை உதவக்கூடும். Continue reading

Posted in இணைய நூலகம் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்