Tag Archives: மேலைச் சாளுக்கியர் வம்சம்

துர்கா கோவில், ஐஹோளே , கர்நாடகா

ஐஹோளே, பண்டைய மற்றும் இடைக்கால இந்து, பௌத்தம் மற்றும் சமண நினைவுச் சின்னங்களை கொண்டுள்ள ஒரு வரலாற்று தலம். இங்குள்ள நினைவுச் சின்னங்கள் கி.பி. நாலாம் நூற்ற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை. கைதேர்ந்த சிற்பிகள் ஐஹோளேயில் ஒன்றிணைந்து தங்கள் கட்டடக்கலைத் திறனை பரிசோதிக்கும் வண்ணம் பல கோவில்களை கட்டினார்கள். இந்த நகரம் அழகாக வடிவமைக்கப்பட்ட பல வழிபாட்டு தலங்களைப் பெற்றுள்ளதனால் பெருமையடைகின்றது. துர்கா கோவில் வளாகத்தில் குறிப்பிடத்தகுந்த சில நினைவுச் சின்னங்களாக துர்கா கோவில், லட் கான் கோவில், மேகுட்டி கோவில், கௌடர்குடி கோவில், சக்ரகுடி கோவில், படிகெர்குடி கோவில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். துர்கா கோவில், ஐஹோளே சிவன் மற்றும் விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட தினசரி வழிபாட்டுக் கோவிலாகும். ‘துர்க்’ என்றால் வடமொழியில் கோட்டை என்று பொருள். இராணுவ முகாமாகப் (military outpost) பயன்பட்டதால் இக்கோவில் துர்க் கோவில் என்று அழைக்கப்பட்டதாம். இங்கு துர்க்கை தொகுதி புடைப்புச் சிற்பமாக முதல் பிரகாரத்தில் செதுக்கப்பட்டிருந்தாலும் துர்க்கை கோவில் என்ற பொருளில் இக்கோவில் அழைக்கப்படவில்லை. நாகரா மற்றும் திராவிட கலை நுணுக்கங்களுடன் அமைந்த கட்டடக் கலையமைப்பும், முன்மண்டப தூண்களிலும், கோஷ்டங்களிலும் அமைந்த கண்ணைக் கவரும் சிற்பங்களும் இக்கோவிலுக்கு அணி சேர்க்கின்றன. இக்கோவில் வளாகம் இந்திய தொல்லியல் அளவீட்டு துறையினரால் நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றது. இவற்றைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தவண்ணம் உள்ளனர். Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரவனபாடி குடைவரைக் கோயில், ஐஹோளே, கர்நாடகா

ரவண பாடி குடைவரைக் கோவில் புலிகேசி (544-566 A.D.) ஆட்சியில், அதாவது சாளுக்கியர்களின் தொடக்க காலங்களில், கட்டப்பட்ட குடைவரைக் கோவில்களில் ஒன்று. சாளுக்கிய கலைப்பாணி எவ்வாறெல்லாம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது என்பதை இக்குடைவரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இங்கு காணும் சிற்பங்கள் மற்றும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகள் எல்லாம் சாளுக்கியர் கலைப்பாணியைப் பறைசாற்றுகின்றன. பரந்த முற்றம் (Front court) இக்குடைவரைக் கோவிலின் சிறப்பு. இக்குடைவரையில் உள்ள விசாலமான செவ்வக வடிவ முக மண்டபம் போல் பாதாமி குடைவரைகளில் கூட பார்க்க இயலாது. இங்குள்ள மற்றோரு சுவையான அம்சம் என்னவென்று தெரியுமா? கருவறையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் அமைப்பு. எவ்வளவு கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியுமா? இக்குடைவரைக் கோவில் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போமா?
Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக